சிரிப்புகள் :


"பஸ் டே கொண்டாடுன பசங்களோட நிலைமை
பாவம்".

"என்ன ஆச்சு?"

"ஜெயில் டே ஆயிடுச்சு".

**********************

"அவர் ஒரு கஜினி ரசிகர்னு எப்படிக் கண்டுபிடிச்ச?"

"எதையும் நூறு தடவை சொன்னா தான் அவருக்கு
ஒரு தடவை புரியுது".

***********************
"என் பேச்சை நானே கேட்க மாட்டேன்னு சொல்லிட்டுத்
திரியுறாரே, முடிவெடுக்கிறதுல அவ்வளவு திடமானவரா?"

"பாவங்க, அவருக்கு காது சரியா இப்போ கேக்குறது இல்லை.
அதான், இப்படிச் சொல்லி சமாளிச்சுட்டு இருக்காரு".

********************

"தல, தலன்னு கிடந்த உங்க பிள்ளை இப்போ எப்படி
இருக்கான்?"

"அவரை மாதிரி உழைச்சு முன்னுக்கு வராம, செமெஸ்டர்க்கு
ஒரு அரியர் வச்சிக்கிட்டு தறுதலையா சுத்துறான்".

*********************

நிருபர் "-

"நடிக்க வராவிட்டால் என்ன நேர்ந்திருக்கும்?"

நடிகை :-

"டைரக்டரிடம் அறை வாங்கியிருப்பேன்".

************************
"முன்னாடி நின்னா ஒண்ணுக்குப் போற பயலுவ. நம்ம மேல
இப்போ பயமே இல்லாம போயிடுச்சு. சரிதானலே, சின்ராசு?"

"ஆத்தா, நீ ஆடு வளர்த்தே, கோழி வளர்த்தே, நாய் மட்டும்
வளர்க்கலை. வெட்டி வம்பைத் தான் வளர்த்தே."
********************
"என்ன தில்லு இருந்தா நம்ம
கார் லோனுக்கு டியூ
கட்டலைன்னு நமக்கே நோட்டீஸ் அனுப்பியிருப்பான்
அந்த மேனேஜர். எங்கடா டிரைவர், எடுடா வண்டியை".

"ஐயா அவனே பக்கத்துக்கு ஊர்ல இருந்து பஸ்ல இங்க
வந்துட்டு இருக்கான். ரோட்லயே மறிச்சு வண்டியை
பேங்க் அதிகாரிங்க எடுத்துக்கிட்டாங்களாம்".

*********************
வாங்கி நேர்முகத் தேர்வில் :-

"படமெல்லாம் பார்ப்பீர்களா? உங்களுக்குப் பிடித்த படம்
என்ன?"

"வசூல் ராஜா, எம். பி. பி. எஸ்."

"இப்போ பேங்கே இருக்கிற நிலைமைல உங்கள மாதிரி
ஆளுங்க தான் எங்களுக்கு வேணும். வராக் கடனை வசூல்
பண்ண, யு ஆர் அப்பாய்ண்ட்டட்.

*****************

"அப்பா, எதிர்ல உள்ளது ஐம்பது வருஷமா இருக்கிற பாரம்பரியமான ஓட்டல். அங்க போயி சாப்பிட
மாட்டேன்னு ஏன் அடம் பிடுக்குறே?"
"அவ்வளவு பழசா ஏண்டா சாப்பிடணும்? இது
சின்ன ஓட்டலா இருந்தாலும் பிரெஷ்ஷா இருக்கும்.
இங்கேயே சாப்பிடலாம்."

*****************
"தலைவர் வெளுத்து வாங்கிட்டார்".

"இன்னும் கூட்டமே ஆரம்பிக்கலை.
என்ன கதை விடுறீர்?"

"சலவைக்கு போட்டது வந்திடுச்சுய்யா
*********************
"நான் டாக்டருக்கு படிச்சு ஏழைகளுக்கு இலவச வைத்தியம்
பார்க்கபிப் போறேன்னு பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம்
வகுப்பு ரிசல்ட் வர்றப்போ குடும்பத்தோட போஸ் கொடுத்தவங்க
எல்லாம் இப்போ எப்படி இருங்காங்க?"

"தன் கிட்ட வைத்தியம் பார்க்க வர்றவங்களை ஏழைகளாக்கிக்கிட்டு இருக்காங்க".

*****************
"ஹலோ விஜய், நான் டாக்டர் ஷண்முகம் பேசுறேன்.
ஏன், ரெண்டு மாதமா ஹெல்த் செக்கப்புக்கு வரலை?"

"வணக்கம் சார், தினம் நாலு கிலோ மீட்டர் நடக்கச்
சொன்னீங்க. இப்போ திருச்சி வரைக்கும் வந்துட்டேன்.
பஸ்ஸோ, ரயிலோ பிடிச்சு சென்னைக்கு வந்துட்டு உங்களைப்
பார்க்குறேன்."

*******************

"என்னது, நீயும் வசூல் ராஜா ஆயிட்டியா?"

"ஆமாம், எலக்சன் நேரத்துல ஒட்டுக்குப்
பணம் வாங்கிட்டு, போடாதவங்களை
அடையாளம் கண்டுபிடிச்சு, கொடுத்த காசை
வட்டியோட வசூல் பண்ற வேலை. என்ன மைத்திரி
அண்ணன் ஐம்பது பேரை வேலைக்கு வச்சிருக்காரு:.

********************
"என்னப்பா, ஐ.டி. ல வேலை பார்க்குற. நாய் பொழைப்புன்னு
அலுத்துக்குறே".
ஆமாப்பா. போன வருஷம் கம்பெனி லாபம் குறைச்சுடுச்சாம்.
கார்பொரேஷன் லாரியில் தான் இப்போ வேலைக்கு கூட்டிட்டுப் போறாங்க".

***************
"பொண்ணு எங்களுக்கு பிடிச்சுப் போச்சு.என்ன செய்வீங்க?"
முப்பது பவுன் நகை. இருபது குடம் தண்ணீர்."

**************