சிரிப்புகள் -


"தேர்தல் கமிஷன் கறாரா
தனிச் சின்னம் தான்னு
துடைப்பம் ஒதுக்கீடு பண்றப்பவே
பயந்தேன்."

"என்ன ஆச்சு?"

"நீன்னா இடத்தில எல்லாம் கட்சியை வாரிப் பெருக்கிட்டாங்க.
எங்கேயும் டெபாசிட் கூட கிடைக்கலை".

---------------------

ஆசிரியர் :- "நாம் இப்பள்ளியில் பணிபுரிகிறேன். இது
எந்தக் காலம்னு சொல்லுங்க".

மாணவர்கள் :- "எங்க போதாத காலம், சார்."
(கோரஸாக)
*******************

"இந்தக் கூட்டத்துக்கு வர்ற எல்லோருக்கும் ஏன்
டிக்ஷனரி தர்றாங்க?"

"தலைவர் எது பேசினாலும் அர்த்தத்தோடு தான் பேசுவாராம்".

*******************

வடபழனி பேருந்து நிலையத்தில் :-

"பிராடவே போற ரெண்டு பஸ் ரெடியா இருக்கு. எது முன்னால போகும்?"
"ரெண்டுமே முன்னால தான் போகும். அவ்வளவு தூரம் ரிவர்ஸ்ல
வண்டியை ஓட்ட முடியாது".


*****************

பஸ்ஸில் கண்டக்டர் :-

"பாட்டி, எங்க போறே?"

"வாயில நல்லா வந்துடப் போகுது. ஒரு காரியமா
கிளம்புறப்போ எங்க போறேன்ன்னு கேட்டா, போற
காரியம் விளங்குமா?"

***************

ஆசிரியர் தன் நண்பரிடம் :-

"இங்கு சிறுநீர் கழித்தால் காவல் துறையிடம் பிடித்துத் தரப்படும்னு பொது இடங்களில்
எழுதியிருக்கு. பொதுச்
சுகாதாரம் பற்றி கிளாஸ்
எடுக்குறப்போ ஒருத்தன் கேட்குறான், "கோமியம்னாலும்
வேலைக்கு ஆகும். அத வச்சுட்டு என்ன பண்ணுவாங்க?-ன்னு,"

******************
பஸ்ஸில் நடத்துனர் :-

"என்னப்பா, டிக்கட் கலர் கூட சொல்லி ஏழு ரூபா இறங்கு,
பத்து ரூபா இறங்கு, பன்னிரண்டு ரூபா இறங்கு கத்திட்டு
வர்றேன். நீ மட்டும் ஏன் இறங்காம இருக்கே? பாஸ் வச்சிருக்கியா?"

"டிக்கெட் எடுக்கலை, சார்."

*********************

"ஏம்பா, நம்மது அக்மார்க் சைவ ஓட்டல் ஆச்சே.
இன்று மட்டும் அசைவம்னு ஏன் போர்டு மாட்டியிருக்கே?"

"உப்புமாவுல புழு, சாம்பார்ல பூச்சின்னு
ஒரே புகார், சார்"
********************


"இந்தக் காலத்துல இப்படி ஒரு பையனா!
லேடீஸ் காலேஜ் பக்கம் போறப்போ கூட
என்ன ஒரு பணிவு, குனிஞ்ச தலை நிமிராம.
ஒன அம்மா அப்பாவை பார்த்து நான் பாராட்டியே ஆகணும்".

"நேத்து ராத்திரில இருந்து கழுத்து சுளுக்கு, சார்."

*********************
இவள் : "எங்க மேனேஜர் சரியான சந்தேகப் பேர்வழி."
அவள் " "ஏன் அப்படிச் சொல்றே?"
இவள் : "ஜெராக்ஸ் எடுத்தாக் கூட வார்த்தைக்கு வார்த்தை
ஒரிஜினலோடு செக் பண்ணிட்டு தான் கையெழுத்து
போடுவார்".

********************

"தலைவரோட அடுத்த பொறந்த நாள் கொண்டாட்டத்துக்கு
நாம் இன்னும் நாலு வருஷம் காத்திட்டு
இருக்கணும்".

"வெளி நாடு போறாரோ?"

"அவர் பொறந்தது பிப்ரவரி இருபத்தி ஒன்பதாம் தேதி ஆச்சே!".

******************








க்கிட்டாங்க.