சிரிப்புகள்-


"என் மனைவி நான் கிழிச்ச கோட்டை தாண்ட மாட்டா.:"

"நீரு ரொம்பக் கொடுத்து வச்சவரு."

"எடைக்குப் போட்டு எவர் சில்வர் பாத்திரம் வாங்கிடுவாய்யா."

*************

"ஏன் அவரை வளைச்சு வளைச்சு போட்டோ எடுக்குறாங்க?"

"ஜெயிச்சு மக்கள் பிரதிநிதி ஆயிட்டாரு.
அஞ்சு வருஷத்துக்கு தொகுதி பக்கமே
வர மாட்டாரே."

****************

"என் சம்சாரம் சமைச்சா இன்னைக்கு மு ழுக்க சாப்பிட்டுட்டே
இருக்கலாம். "

"நளபாகம் அருமையா இருக்குமோ?"

"கேஸை மிச்சம் பிடிக்குறேன்னு எல்லாத்தையும் ஒரு விசில்
வந்ததும் இறக்கி வச்சிடுவா."

*****************

"எங்கப்பாக்கு எங்க மேலே உசிரு."
"சந்தோசம். இப்போ எப்படி இருக்கார்?"
"ஏதோ, நடைப் பிணமா வாழ்ந்துட்டு இருக்கார்".
******************

இவன் :- "இலக்கை எட்டலைன்னு உங்க அண்ணனை
தண்ணியில்லா காட்டுக்கு அவங்க பேங்குல
மாத்துனாங்களே. இப்போ எப்படி இருக்கார்?"

அவன் :- "எப்பவும் 'தண்ணி'யிலே இருந்து புலம்பிட்டு
இருக்காரு."
***************
"ஜோசியர் அய்யா. நீங்க கணிச்சு சொன்னபடி நான்
வாழ்க்கைல பல உயரங்களை இப்போ தொட்டுட்டு
இருக்கேன்".

"என்ன பண்றீர்?"

"லிப்ட் ஆப்பரேட்டரா இருக்கேன்."

*****************
"உங்க நண்பர் ஒருத்தரு எப்பவும் நேர்மையாய் இருப்பது
எப்படின்னு க்ளாஸ் எடுத்திட்டு இருப்பாரே, இப்போ என்ன
பண்றார்?"

"நேர்மையால் இழந்தது எப்படி?-ன்னு புத்தகம் எழுதிட்டு
இருக்கார்".
****************
"வாளியும், வௌக்குமாறுமா தலைவரு எங்க கிளம்பிட்டாரு?"

"நாடு முழுக்க தேர்தலில் தோற்றதை இன்னைக்கு கட்சியோட
செயற்குழுவில் அலசி ஆராயப் போறாங்களாம்".

***************

இவன் :- "அந்தப் படத்துக்கு திருட்டுத்தனமா போனப்போ
தியேட்டரில் அப்பா பார்த்துட்டார்".
அவன் : "செமையா திட்டு வங்கியிருப்பியே?"
இவன் :- "அம்மா கிட்ட
சொல்லிடாதேன்னு அழ ஆரம்பிச்சுட்டார்".

*****************