சிரிப்புகள் :-

இவர் :- "ஏன் தலைவர் உடம்பு முழுக்க மாவுக் கட்டு
போட்டிருக்கிறார்?"

அவர் :- "பொதுக் குழு கூட்டத்துல அரசியல் உள்'குத்து'
ரொம்பவே இருந்ததாம்".

**************

இவர் :- : "பாவம், இந்த டாக்டர் நல்லாத் தானே இருந்தார்.
ஏன் தட்டுத் தடுமாறி நடக்குறாரு?"

அவர் :- "மணி நாலு தானே ஆகுது. அவரோட 'பார்வை'
நேரம் சாயங்காலம் ஆறு முதல் எட்டு வரைக்கும்
தானே?"
***************

மொட்டையடித்த மகன் :- "மரணப் படுக்கையிலிருந்த
எங்கப்பா கிட்ட கடைசி ஆசை
என்னன்னு கேட்டோம். அம்மாவைக்
கை காட்டியபடி செத்துட்டார்."

இவர் :- "அடுத்த பிறவியிலும் அவங்க
மனைவியா வந்துடக் கூடாதுன்னு
சூசகமா சொன்னாரோ என்னவோ?"
*
****************

"அரசர் புலவரை ஏன் சிறையில் அடைச்சுட்டார்?"

"இவர் பினாமி பெயர்களில் நாடெங்கும் பார் நடத்துறதா
பேச்சிருக்கு. இதுல புலவர் வேற 'பார் வேந்தே, என்னைப்
பார் வேந்தே' ன்னு திரூவிளையாடல் தருமி போல பேசினாராம்"

******************


"எங்க மேலதிகாரி ரெம்பவும் கைச்சுத்தமானவரு."

"இந்தக் காலத்துல கூட இப்படி ஒருத்தரா!"

"நீர் வேறு. எப்பவும் கையில் கிளவுஸ் போட்டிருப்பார்".

*****************

"என்னங்க? ஸ்டேஷன்ல ரயிலின் கோச் பொசிஷன்
சொன்னப்போ அத்தனை
பெட்டிகள் சொன்னாங்க.
இப்போ நாலே பெட்டிகள் தான் இருக்கு".

"will arrive shortly-ன்னு சரியாத்தானே சொன்னாங்க. அதான் குட்டையா
வந்திருக்கு."
****************

-

அனைத்தும் கற்பனையே. கடைசித் துணுக்கில் ஆங்கிலம்
தவிர்க்க இயலாததாகி விட்டது. மன்னிக்கவும்.

அன்புடன்,
கனகா.