கொளுத்தும் வெயிலில் நடந்தபின்
கிடைக்கும் AC காற்றின் முதல் ஸ்பரிசம் ...

நாவறண்டு ஏங்கும்போது
குடிக்கும் குளிர் பானத்தின் முதல் மடக்கு ...

5 ருபாய் அவசரத்தேவையின் போது
வீட்டுப் பரணில் கிடக்கும் 100 ருபாய்...

நின்று கொண்டே பயணிக்கையில்
கிடைக்கும் ஜன்னலோர சீட்டு...
இளையராஜா பாட்டு...

அவளுடன் பேசத் துடிக்கும்போது
என்வீட்டில் அவள் வருகை...

என நிமிடங்களை நிம்மதியாக்கும்
சிறு தேவை, நிறைவில் பெரும் சுகம்...