மக்களவை தேர்தலில் பணப்பட்டுவாடாவை தவிர்க்க தமிழக தேர்தல் ஆணையம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததும் பறக்கும் படையினர் வாகன சோதையில் ஈடுபட்டு வந்தனர். மேலும் ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட பணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியதாவது தமிழகத்தில் இதுவரை 127.66 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் 50.03 கோடி ரூபாய் வருமான வரித்துறை மூலம் கைப்பற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் உரிய அனுமதியின்றி எடுத்துச்செல்லப்பட்ட 98 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.

Source: https://tamil.southindiavoice.com/lo...amount-seized/