மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். அந்த வகையில் இன்று தேனி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி அவர்கள் பிரச்சாரம் மேற்கொள்கிறார். அதற்காக தேனி அருகே பிரமாண்ட பிரசார மேடை அமைக்கப்பட்டது. இந்நிலையில் எதிர்பாராதவிதமாக பிரசார மேடை சரிந்து விழுந்ததால் தேனியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை சரி செய்யும் பணியில் தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் யாருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.

Source: https://tamil.southindiavoice.com/lo...pses-in-theni/