தமிழகத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் ராகுல் காந்தி நாளை தமிழகத்தில் பல இடங்களில் பிரச்சாரம் மேற்க்கொள்கிறார். குறிப்பாக தேனி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவனை ஆதரித்து பேசுகிறார். அவர் பிரச்சாரம் மெற்கொள்ளும் இடங்கள் குறித்த விபரங்கள் காங்கிரஸ் கட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. காலை 11.40 மணிக்கு – கிருஷ்ணகிரி, மதியம் 2.10 மணிக்கு- சேலம், மாலை 4.30 மணிக்கு தேனி, இரவு 6.15 மணிக்கு திருப்பரங்குன்றம்.

Source: https://tamil.southindiavoice.com/lo...nadu-tomorrow/