அடுத்தவர் மலத்தை
சுமக்க வைத்து
ஒரு பிரிவு மக்களையும்
அடுத்தவர் குப்பைகளை
அள்ளவைத்து
மற்றொரு பிரிவையும்..
வார் அறுந்த
செருப்பை தைப்பதெற்கென்றே
ஒரு கூட்டத்தையும்..
முடி வெட்டுவதற்கு என்றே
சில மனிதர்களை பழக்கப்படுத்தி
இன்னொரு பிரிவையும்..
அவர்களுக்கு அடுத்து
அவர்கள் வாரிசுகளையும்..
ஊருக்கு ஒதுக்குப் புறத்தில்..
அவர்களுக்கு கிடைத்த
69க்கு மட்டும்
பங்கு போட எல்லோரும்..
Bookmarks