உலகமெங்கும் பல சாதனைகளை படைத்த பாகுபலி படத்தை இயக்கிய இயக்குனர் எஸ்எஸ் ராஜமௌலி இயக்கம் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 300 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட உள்ள இந்த படத்தை டிவிவி எண்டர்டேய்ன்மென்ட் தயாரிக்க உள்ளது. “ஆர்ஆர்ஆர்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் நடிகர் அஜய்தேவ்கன், நடிகை அலியாபட், இங்கிலாந்து நடிகை டெய்ஸி எட்கர் ஜோன்ஸ் ஆகியோருடன் சமுத்திரகனியும் நடிக்க உள்ளார். தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் பிற இந்திய மொழிகள் இத்திரைப்படம் ஜூலை 30, 2020 உலகெங்கும் வெளியாகவுள்ளது.

Source: https://www.tamil32.com/cinema-news/...devgn-for-rrr/