நடிகர் அஜித் தற்போது பெண்களுக்கான முக்கிய கதையாக அமைந்துள்ள “நேர்கொண்ட பார்வை” படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், பாலிவுட் நடிகை வித்யா பாலன் இடம்பெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதில், அஜித்தும், வித்தியா பாலனும் இருக்கும் காட்சிகள் இந்த இரண்டு நாட்களில் எடுத்து முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அமிதாப்பச்சன் நடிப்பில் ஹிந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேகே இந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: https://www.tamil32.com/cinema-news/...latest-update/