இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையே டெல்லியில் நடந்து வரும் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியாவின் தொடக்க பேட்ஸ்மேன் உஸ்மான் கவாஜா சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இந்திய பந்து வீச்சாளர்களில் புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டையும், ஜடேஜா, சமி ஆகியோர் தலா 2 விக்கெட்டையும், குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 273 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இந்திய அணி களமிறங்கி விளையாடி வருகிறது.

Source: https://www.tamil32.com/sports-news/...get-for-india/