மக்களவை தேர்தலில் அதிமுக-தேமுதிக இடையே கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. இந்த வேளையில் திமுக பொருளாளர் துரைமுருகனை தேமுதிக பொருளாளர் சுதீஷ் தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளார். அப்போது நாங்கள் திமுக கூட்டணிக்கு வந்தால் தொகுதிகள் வழங்க வாய்ப்புள்ளதா என்று வினவியுள்ளார். அதற்கு பதிலளித்த துரைமுருகன் எங்களிடம் கொடுப்பதற்கு சீட் இல்லை என பதிலளித்துள்ளார். தற்போது தேமுதிக அதிமுக அணியில் இணையும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

Source: https://www.tamil32.com/lok-sabha-el...durai-murugan/