நேற்று உயர்நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பில் இரட்டை இலைச் சின்னம் தற்போதைய முதல்வர் மற்றும் துணை முதல்வர் தலைமையில் செயல்படும் அதிமுகவிற்கே உரியது எனவும் டிடிவி தினகரனுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க முடியாது எனவும் தீர்ப்பளித்திருந்தது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உச்ச நீதிமன்றத்தை நாடி குக்கர் சின்னத்தை பெற ஆமமுககவுக்கு உரிமை உள்ளது எனவும் நிச்சயம் நாங்கள் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் குக்கர் சின்னத்திலேயே போட்டியிடுவோம் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Source: https://www.tamil32.com/tamilnadu-ne...r-symbol-back/