Page 21 of 30 FirstFirst ... 11 17 18 19 20 21 22 23 24 25 ... LastLast
Results 241 to 252 of 349

Thread: Tamil32 - செய்தி தொகுப்பு

                  
   
   
  1. #241
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    03 Oct 2018
    Location
    Chennai
    Posts
    349
    Post Thanks / Like
    iCash Credits
    3,777
    Downloads
    0
    Uploads
    0

    மயிலாடுதுறையில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியா?

    தமிழ் மாநில காங்கிரஸ் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒரே ஒரு தொகுதி தான் ஒதுக்குவதற்கு அதிமுக முன்வந்துள்ளது. அதுவும் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் தான் அந்த கட்சிக்கு ஆதரவு அதிகம் என்பதால் மயிலாடுதுறை தொகுதியை எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறது தமிழ் மாநில காங்கிரஸ்.

    Source: https://www.tamil32.com/tamilnadu-ne...rai-tamilnadu/

  2. #242
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    03 Oct 2018
    Location
    Chennai
    Posts
    349
    Post Thanks / Like
    iCash Credits
    3,777
    Downloads
    0
    Uploads
    0

    அரசியல் கட்சிகளுடன் தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை

    மக்களவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை பற்றி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரகாஷ் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். தேர்தல் ஆணையம் மக்களவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் அதிமுக, திமுக , காங்கிரஸ் சிபிஎம்,சிபிஐ,பாஜக உள்ளிட்ட 9 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரகாஷ் இன்று பிற்பகல் ஆலோசனை நடத்துகிறார். இதில் தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது பற்றியும் அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Source: https://www.tamil32.com/tamilnadu-ne...tical-parties/

  3. #243
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    03 Oct 2018
    Location
    Chennai
    Posts
    349
    Post Thanks / Like
    iCash Credits
    3,777
    Downloads
    0
    Uploads
    0

    நடப்பு நிதியாண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி 8.65%

    தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நடப்பு நிதியாண்டில் 8.5 சதவீத வட்டி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் கங்குவார் கூறியுள்ளார். நடப்பு நிதி ஆண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களுக்கு கூடுதல் வட்டி வழங்க இ.பி.எப் நிறுவனத்தின் அறங்காவலர் வாரியத்தின் அனைத்து உறுப்பினர்களும் ஒப்புக் கொண்டனர் எனக் குறிப்பிட்டார். இந்த ஒப்புதலை மத்திய நிதி அமைச்சகத்தின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்படும். நிதி அமைச்சகம் அனுமதி அளித்தவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.

    Source: https://www.tamil32.com/india-news/e...e-raised-8-65/

  4. #244
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    03 Oct 2018
    Location
    Chennai
    Posts
    349
    Post Thanks / Like
    iCash Credits
    3,777
    Downloads
    0
    Uploads
    0

    இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் தனுஷின் அடுத்த படக்கூட்டணி

    கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ரஜினி, சசிகுமார் ,விஜய் சேதுபதி ,சிம்ரன் ,திரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் “பேட்ட” திரைப்படம் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் தனது அடுத்த படத்தில் ரஜினியுடன் இணைந்துள்ளதாக பேச்சு நிலவியது. இதுகுறித்து கார்த்திக் சுப்பராஜ் எந்தவித தகவலும் கூறவில்லை. ஆனால் தற்போது அவருடைய அடுத்த படத்திற்கான தகவல் வெளியாகியுள்ளன. கார்த்திக் சுப்புராஜ் தன்னுடைய அடுத்த படத்தில் தனுஷுடன் இணைந்துள்ளார். இத்திரைப்படத்தை y not studios தயாரிக்க உள்ளது. இதற்கான படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்க உள்ளது. இதற்கான பணிகளில் கார்த்திக் சுப்புராஜ் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

    Source: https://www.tamil32.com/cinema-news/...actor-dhanush/

  5. #245
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    03 Oct 2018
    Location
    Chennai
    Posts
    349
    Post Thanks / Like
    iCash Credits
    3,777
    Downloads
    0
    Uploads
    0

    அரவிந்த் கெஜ்ரிவால் வரும் மார்ச் 1ம் தேதி முதல் உண்ணாவிரதம்

    New Delhi: டெல்லியில் சில மாதங்களுக்கு முன்பு அரசின் தலைமைச் செயலாளர் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அமைச்சர்களுடன் ஐஏஎஸ் அதிகாரிகள் எந்தவிதமான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவில்லை. ஐஏஎஸ் அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி துணை நிலை ஆளுநர் பைஜால் எந்தவிதமான முயற்சியும் எடுக்காமல், அவர்களை தூண்டிவிட்டதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது. நீண்ட சமரசத்திற்கு பிறகு போராட்டம் திரும்பப் பெறப்பெற்றது .இந்நிலையில் டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி மார்ச் 1ம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

    Source: https://www.tamil32.com/india-news/a...om-1-st-march/

  6. #246
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    03 Oct 2018
    Location
    Chennai
    Posts
    349
    Post Thanks / Like
    iCash Credits
    3,777
    Downloads
    0
    Uploads
    0

    தமிழ் பெண்ணுக்கு உலகின் சிறந்த ஆசிரியர் விருது

    Colombo இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர் யசோதை செல்வகுமரன். இலங்கையில் நடந்த போர் காரணமாக 10 வயதில் ஆஸ்திரேலியாவில் குடும்பத்துடன் குடியேறினார். ஆஸ்திரேலியாவில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லண்டனில் உள்ள வெக்கரி பவுண்டேஷன் என்ற தனியார் தொண்டு நிறுவனம் ஆண்டுதோறும் சிறந்த ஆசிரியர்களுக்கான விருதை வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது பெறுவோர் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்த ஆசிரியர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் யசோதை செல்வகுமரனின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இவருக்கு 10 லட்சம் டாலர் பரிசு வழங்கப்படுகிறது.

    Source: https://www.tamil32.com/world-news/s...teacher-prize/

  7. #247
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    03 Oct 2018
    Location
    Chennai
    Posts
    349
    Post Thanks / Like
    iCash Credits
    3,777
    Downloads
    0
    Uploads
    0

    ராட்சசன் படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது

    தமிழில் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் அமலாபால் முனீஷ்காந்த், காளிவெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ராட்சசன். ஜிப்ரான் இசையமைத்த இப்படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்தது. இதன் ஹிந்தி ரீமேக் உரிமையை மட்டும் பட வெளியீட்டுக்கு முன்பே விஷ்ணுவிஷால் கைப்பற்றிவிட்டார். கடும் போட்டிக்கு இடையே ஹேவிஸ் லட்சுமண் தெலுங்கு ரீமேக் உரிமையை கைப்பற்றினார்.இதில் ஹீரோவாக பெல்லம் கொண்டா ஸ்ரீனிவாஸ் மற்றும் ஹீரோயினாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்க உள்ளார். தெலுங்கிலும் ஜிப்ரான் இசை அமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

    Source: https://www.tamil32.com/cinema-news/...ade-in-telugu/

  8. #248
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    03 Oct 2018
    Location
    Chennai
    Posts
    349
    Post Thanks / Like
    iCash Credits
    3,777
    Downloads
    0
    Uploads
    0

    விசுவாசம் படத்தின் உண்மையான வசூல் நிலவரத்தை வெளியிட்ட சத்யஜோதி தியாகராஜன்

    Viswasam Box Office Update: சிவா இயக்கத்தில் அஜித் நயன்தாரா, அனுஷ்கா,விவேக், ஜெகபதிபாபு,ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் விசுவாசம். ஜனவரி 10ஆம் தேதி வெளியான திரைப்படத்தின் வசூல் சாதனை பற்றி கூறிய சத்யஜோதி தியாகராஜன் “இந்தப் படம்தான் எனது வாழ் நாளில் ஆகச்சிறந்தது. இதற்கான பாராட்டு அஜித் மற்றும் ஒட்டுமொத்த படக் குழுவுக்கும் தான் செல்ல வேண்டும். இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூபாய் 125 கோடி முதல் 135 கோடி வசூல் செய்துள்ளது. விநியோகஸ்தர்களில் வாழ்நாள் பங்கு என்பது ரூபாய் 70 கோடி முதல் ரூபாய் 75 கோடி வரை எட்டும்.எந்த ஒரு அளவுகோலை வைத்து மதிப்பிட்டாலும் இந்த வசூல் வியப்புக்குரியது. படத்தின் கரு குடும்பம் குடும்பமாக வந்து ரசிகர்களை படம் பார்க்க வைத்தது. 600 திரையரங்குகளில் நாங்கள் படத்தை ரிலீஸ் செய்ய முடிந்தது எங்களுக்கு சாதகமாக அமைந்தது” எனத் தெரிவித்தார்.

    Source: https://www.tamil32.com/cinema-news/...-tamil-cinema/

  9. #249
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    03 Oct 2018
    Location
    Chennai
    Posts
    349
    Post Thanks / Like
    iCash Credits
    3,777
    Downloads
    0
    Uploads
    0

    கமலை மனதார வாழ்த்திய ரஜினிகாந்த்

    முதல் முறையாக தேர்தலில் போட்டியிடப் போகும் கமல்ஹாசனுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்திய ரஜினிகாந்த் “கட்சி ஆரம்பித்து இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்து தேர்தலில் முதல் முறையாக போட்டியிட போகும் மக்கள் நீதி மய்யதின் தலைவர் என் நண்பர் கமல்ஹாசன் அவர்கள் பொது வாழ்விலும் வெற்றி பெற என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்” என வாழ்த்தினார்.

    Source: https://www.tamil32.com/lok-sabha-el...itical-journey

  10. #250
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    03 Oct 2018
    Location
    Chennai
    Posts
    349
    Post Thanks / Like
    iCash Credits
    3,777
    Downloads
    0
    Uploads
    0

    நாங்கள் தான் தமிழகத்தின் A டீம் – கமல்ஹாசன்

    Makkal Needhi Maiam: நெல்லை பொதுக்கூட்டத்தில் நேற்று பேசிய கமல்ஹாசன் என்னைப் பார்த்து பாஜகவின் B டீம் என்று சொல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை நாங்கள் தான் தமிழகத்தின் A டீம். இதில் மக்கள் நீதி மய்யத்தின் கொள்கைகளை வெளியிட்ட கமல்ஹாசன் தனது கட்சி சார்பாக பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் விருப்பமனு வெளியிட்டார். ஊழலை ஒழிக்க நினைக்கும் ஒவ்வொருவரும் வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வேட்பாளராக வரவேண்டும். நல்லவர்கள் நாட்டின் மீது பற்று கொண்டவர்கள் அனைவரும் எங்கள் கட்சி சார்பாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் அளிக்கலாம்” என்றார்.

    Source: https://www.tamil32.com/lok-sabha-el...ot-bjps-b-team

  11. #251
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    03 Oct 2018
    Location
    Chennai
    Posts
    349
    Post Thanks / Like
    iCash Credits
    3,777
    Downloads
    0
    Uploads
    0

    ட்ரம்ப் மற்றும் கிம் ஜோங் உன் சந்திப்பு

    Trump-Kim Vietnam Summit: அமெரிக்கா மற்றும் வடகொரியா ஆகிய இரு நாட்டு தலைவர்களும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் சந்தித்துப் பேசினர். தற்போது இருதரப்பினருக்கும் கருத்து வேறுபாடு நிலவியுள்ளதால் அதற்கு தீர்வு காண இரண்டாவது சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வியட்நாமின் ஹேனோய் நகரில் வரும் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் சந்திப்பிற்காக கிம் ஜோங் உன் ஆயுதம் தாங்கிய ரயிலில் 60 மணி நேரம் பயணம் மேற்கொண்டு அங்கு செல்கிறார்.

    Source: https://www.tamil32.com/world-news/n...ietnam-summit/

  12. #252
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    03 Oct 2018
    Location
    Chennai
    Posts
    349
    Post Thanks / Like
    iCash Credits
    3,777
    Downloads
    0
    Uploads
    0

    Oscar Awards 2019: – யாருக்கெல்லாம் ஆஸ்கர் விருது? முழுப் பட்டியல் இதோ

    என்னமா நடிக்கிறான்யா இவனுக்கு ஆஸ்கார் விருதே குடுக்கலாம்” என்று பல நபர்கள் நம்மிடமே கூறி நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆஸ்கார் சினிமா துறையில் மாபெரும் முக்கியமான கவுரவிக்கும் நிகழ்ச்சியாய் பார்க்கப்படுகிறது.

    Source: https://www.tamil32.com/world-news/o...rs-and-movies/

Page 21 of 30 FirstFirst ... 11 17 18 19 20 21 22 23 24 25 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •