தமிழை (வி)சுவாசிப்போம்

தமிழ்
அழகின் குழந்தை.
மொழிகளின் அன்னை.

அழகே பெயரான
அழகு.

மென்மை வண்ணத்தில்
உண்மை பேசும்
மேன்மை.

புதிதாகிக்
கொண்டேயிருக்கும்
பழமை.

( கேப்டன் பதிப்பகம் )

தமிழ் பேசப் பேச
நாவினிக்கும்
நெஞ்சம் சிலிர்க்கும்
உயிர் துளிர்க்கும்.

தென்றலைப் பதமாக்கி
தேகமாய்ச் சமைத்து
சந்தனம் குழைத்து
வசந்த வா(க)னத்தில்
பவனி வரும்
சுகந்த மொழி
தமிழ் மொழி.

அறிவுப் பசிக்கு
அறுசுவை விருந்து தரும்
அற்புத மொழி.

( கேப்டன் யாசீன் )

ஆபரணங்கள் கோடி
அணியாத தோழி
அழியாத தோணி
தேனூறும் தேனி.

தமிழ் மொழி
தமிழரின் விழி
தரணியின் வழி.

மொழிகள் வளர்ந்தால்
தமிழ்
முதலாய் வளரும்.

மொழிகள் அழிந்தால்
தமிழ்
இறுதியாய் அழியும்.

மெல்லத் தமிழ் இனி
வெல்லமாகும் கனி.

தமிழை நேசிப்போம்
தமிழை வாசிப்போம்
தமிழை விசுவாசிப்போம்
தமிழை சுவாசிப்போம்.

கேப்டன் யாசீன்

கேப்டன் பதிப்பகம்

(பிப்ரவரி 21 - ம் தேதி உலகத்
தாய்மொழி தினம்)