ரெனால்ட் நிறுவனம் தனது 2019ம் ஆண்டுக்கான டஸ்டர் கார்களில் சில உபகரணங்களுடன் மாற்றங்களை செய்துள்ளது. மேலும் எஸ்யூவிகளின் வகை லைன்அப்களை மறுசீரமைப்பு செய்துள்ளது.

இந்த லைன்அப்-களில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள், புதிய மிட் ஸ்பெக் RxS டீசல்-AMT வகைகளில் விலை 12.10 லட்ச ரூபாயாகும். (டெல்லியில் எக்ஸ் ஷோரூம் விலை). இது டாப் ஸ்பெக் RxZ AMT வகைகளுடன் ஒத்திருக்கிறது. மற்ற மாற்றங்களாக என்ட்ரி லெவல் டீசல் கார்களில் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. மேலும், மிட்-ஸ்பெக் RxL வகைகள் RxE, RxS மற்றும் RxZ என்ற மூன்று வகையாக வெளியாகியுள்ளது.

டாப் ஸ்பெக் 110hp RxZ டீசல் வகைகள் மட்டுமே ஆல்-வீல் டிரைவ்களிள் கிடைக்கிறது.

புதிய பெட்ரோல் மெனுவல் வகைகள், பெட்ரோல் RxL வகைகளுக்கு மாற்றாக வெளியாகியுள்ளது. பெட்ரோல் RxS கள் ஏற்கனவே CVT கியர் பாக்ஸ் கொண்ட காராக இருந்தது.

உபகரணங்களை பொறுத்தவரை, மேம்படுத்தப்பட்ட டஸ்டர்களில் மேம்படுத்தப்பட்ட டச்ஸ்கிரீன் இன்போடேய்ன்மென்ட் சிஸ்டம்களுடன் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்டிராய்டு கனெக்டிவிட்டி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் ரெனால்ட் நிறுவனம் டிரைவர் ஏர்பேக்களையும் இணைந்துள்ளது. இதுமட்டுமின்றி மேம்படுத்தப்பட்ட எஸ்யூவிகளுக்கான ஸ்டாண்டர்ட் கிட்களுடன் ABS வசதிகளும் இடம் பெற்றுள்ளது.

டஸ்டர் வகைகளில் மெக்கானிக்கல் ரீதியாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வயை 106hp, 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என இரண்டு நிலைகளில், 85hp மற்றும் 110hp அளவில் டியூன் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் யூனிட்கள் 5 ஸ்பீட் மெனுவல் அல்லது CVT கியர் பாக்ஸ் கொண்டதாக இருக்கும். மேலும் இதை விட ஆற்றல் குறைந்த 85hp டீசல் வகைகளில் 5 ஸ்பீட் மெனுவல் யூனிட் மட்டுமே இடம் பெற்றிருக்கும். 110hp டீசல் கார்களில் 6 ஸ்பீட் மெனுவல் அல்லது AMT கியர்பாக்ஸ் மற்றும் ஆப்சனலாக ஆல்-வீல் டிரைவ் இடம் பெற்றிருக்கும்.

டஸ்டர் கார்கள் 2019 மாடல் ஆண்டிற்கான புதுப்பிக்கப்பட்ட ஹூண்டாய் கிரட்டா, மாருதி சுசூகி எஸ்-கிராஸ் போன்ற கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

Source: https://www.autonews360.com/car-news...-rs-1210-lakh/