2019 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் நாளை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது இதனை நிதியமைச்சரும் துணை முதலமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் அவர்கள் சட்டப்பேரவையில் நாளை தாக்கல் செய்கிறார். மத்திய அரசு தனது இடைக்கால பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி அறிவித்துள்ள நிலையில் பல மாநிலங்கள் 2019 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்கள் அதேபோல் தமிழகத்திலும் பிப்ரவரி எட்டாம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது திட்டமிட்டபடி நாளை சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இது துணை முதலமைச்சர் ஓபிஎஸ் அவர்கள் தாக்கல் செய்யும் எட்டாவது பட்ஜெட் ஆகும்.

Source: https://www.tamil32.com/tamilnadu-ne...dget-tomorrow/