சுத்தமான தேனில் மகரந்தம் கலந்திருக்கும். இடத்திற்கு இடம் இது மாறுபடும். இளம் மஞ்சள் நிறத்தில் இருக்கும். நாளடைவில் மங்கிய நிறத்திற்கு மாறிவிடும்.

ஆறு மாதத்திற்கு தேனை வைத்திருந்து சாப்பிடலாம். தேனில் உள்ள சர்க்கரை சத்து, வைட்டமின் சத்து, உலோகச் சத்து உடலுக்கு ஏற்றது. சில சமயங்களில் தேனில் கலந்துள்ள மகரந்தம் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும்.

தேன் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிய சிறிதளவு தேனில் தீக்குச்சியை சில விநாடிகள் ஊற வைத்து துடைத்து தீப்பற்றவைக்க வேண்டும். குச்சி சீக்கிரம் எரிந்தால் தேனில் சர்க்கரை கலப்படம் இல்லை என்பதை அறியலாம். அல்லது மை உறிஞ்சும் காகிதத்தில் செய்தி தாளில் சிறிதளவு தேனை ஊற்றி சில நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். பேப்பர் தேனை உறிஞ்சாமல் இருந்தால் அது நல்ல தேன் என்பதை அறிந்து கொள்ளலாம்.

WEBSITE : http://www.tamilxp.com/