ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான மாடல் புல்லட் 500. இந்த பைக்கில் இறுதியாக ABS பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக்கள் டூயல் சேனல் ABS யூனிட், 14 ஆயிரம் ரூபாய் அதிகமாக விற்பனை செய்யப்பட உள்ளது. ராயல் என்ஃபீல்ட் புல்லட் 500 ஏபிஎஸ் பைக்களின் விலை 1.87 லட்சமாகும் (எக்ஸ்ஷோரூம் விலை டெல்லியில்). இந்த பைக்களை வாங்க விரும்புபவர்கள், ஆன்லைன் மற்றும் ராயல் என்ஃபீல்ட் ஷோரூம்களில் 5 ஆயிரம் ரூபாய் செலுத்தி புக்கிங் செய்து கொள்ளலாம். வழக்கமான ABS அல்லாத வகை புல்லட் 500 பைக்கள் ஸ்டாக் உள்ள வரை விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://www.autonews360.com/bike-new...-rs-1-87-lakh/