முதல் நுாறு

எதிலுமே முதல் என்பது விஷேஷமானது என்பதை எப்படி மறுக்க முடியும்?
10 வருடங்கள் தொடர்ந்து பன்னாட்டு கிரிக்கெட் விளையாடி வருகின்ற இந்திய பன்முக ஆட்டக்காரரான ரவீந்திரா ஜடேஜாவுக்கு, ஒரு நுாறுக்கான காலம் இப்பொழுதுதான் கனிந்திருக்கின்றது. மே.இந்திய அணிக்கு எதிராக தனது முதலாவது டெஸ்ட் மோதலில், இந்தியா ஆடிக் குவித்த 600க்கு மேற்பட்ட ஓட்டங்களில் தன் பங்கிற்கு ஒரு சதத்தையும் அடித்துள்ளார் ஜடேஜா! முன்பொரு தடவை ஓவல் மைதானத்தில் 86 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தபோது, இந்த வாய்ப்பு அவரிடமிருந்து கைநழுவிப் போயிற்று.
இந்த வருடம் இவருக்கு இந்திய அணியில் அதிகம் விளையாட வாய்ப்பளிக்கப்படவில்லை. பாண்டியா காயப்பட்டதால், அவசரம் அவசரமாக , ஆசியக் கிண்ணத் தொடரில் விளையாட அழைக்கப்பட்டார். அங்கு கணிசமாக தன் பங்களிப்பை வழங்கிய ஜடேஜா இப்பொழுது தன் நீண்ட நாள் ஆசையையும் நிறைவேற்றி இருக்கிறார்.
இன்னொரு சதத்தை விளாசித் தள்ளியுள்ள கோலி, தொடர்ந்து 3வது வருடமாக, 1000 ஓட்டங்கள் என்ற இலக்கை தாண்டி அசத்தியிருக்கிறார்.
இரண்டாம் நாள் ஆட் ட முடிவில், மே.இந்திய அணி படுதோல்வியைத் தழுவப் போகின்றது (இன்னிங்ஸ் தோல்வி)என்பதில் சந்தேகமே இல்லை. இந்த டெஸ்ட் மோதல் 3 நாட்களில் அதாவது இன்றுடன் நிறைவுபெற்றால் அதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. கோலியாத் டேவிட்டுன் மோதும் நிலைதான் இங்கே!
06.10 ajg