அனைவருக்கும் வணக்கம். இன்று நான் இங்கே பதியபோகும் விஷயங்கள் சிலருக்கு நம்பமுடியாமல் போகலாம் . மதவாதிகளுக்கு ஏற்புடையதாக இல்லாமலும் இருக்கலாம் இருப்பினும் தவறு இருந்தால் அடியேன் முதலிலே மன்னிப்பு கேட்கிறேன். மதவாதியாக இல்லாமல் விஞ்ஞான ரீதியாக பொதுவாதி யாக சிந்திதால் என்னுடைய பதிவு விளங்கும்.

கடவுள் எங்கு இருக்கிறார் அவர் யார் என்று கேட்டால் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் சொல்வார்கள் கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று. கிருஸ்தவ மதத்திலே பரலோக பிதாவாகவும் ஏசு வாகவும் வழி படுகிறார்கள். இஸ்லாம் மதத்திலே உருவமற்ற கடவுளாக அல்லாவை வழிபடுகிறார்கள். புத்த மதத்திலே புத்தரை வழிபடுகிறார்கள். இவ்வாறு அவரவர் மதங்களை மத தோற்றுவிப்பாளர் மூலமாகவும் உருவ மற்றம் அரூபமாகவும் வழிபடுகின்றனர்.

இப்போது உண்மையில் கடவுள் என்றால் யார் அவருக்கு உண்மையில் உருவம் இருக்கிறதா இல்லையா என்பதை பற்றி பார்போம்.

இந்த பிரபஞ்சமே பஞ்ச பூதங்களால் ஆனது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இப்போது இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. உதாரணமாக பஞ்சபூதங்கள் அனைத்தும் ஒரு அசைவில்லா உயிரற்ற பொருளாக இருந்தால் அதை இயக்கும் உள் சக்தியே கடவுள். சூரியன் ஒளிர்கிறது அனல் சக்தியை பூமிக்கு அனுப்புகிறது. அதுமட்டு மில்லாமல் தன்னை தானே சுற்றி பிரபஞ்சத்தை சுற்றுகிறது அதன்னுள்ளே செயல்படும் இயக்கு விசையே கடவுள். பூமி நிலத்தையும், நீரையும், காற்றையும் கொண்டுள்ள பகுதி இருப்பினும் கடல் அலைகளின் இயக்கம், காற்றின் இயக்கம், நிலநடுக்கம், சூறாவளி, மழை பொழிவு இவை அனைத்திற்கும் சூரியன் மறைமுக தொடர்பில் உள்ளது. பஞ்சபூதங்களின் உள்ளே ஊடுருவி அதை இயக்கும் சக்தியே கடவுள் இதுதான் என் வாதம்.

நம்முடைய பிரபஞ்சம் மற்றும் அனைத்து ஜுவராசிகளும் அணுவால் ஆனவை. இந்த அணுவின் உள்ளே புரோட்டான் எலக்ட்ரான் மற்றும் நியூட்ரான் உள்ளது என்பது நாம் அறிந்ததே. இவற்றை இயக்கும் இயக்கு விசை கடவுள் என்றால் கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று நம் முன்னோர் சொன்னது சரிதானே...

இப்போது மனிதன் மற்றும் பிற ஜீவராசிகள் பற்றி பார்போம். அண்டத்தில் அடங்குபவை பிண்டத்திலும் அடங்கும் என்பது நமது ஔவை பாட்டியாரின் கூற்று. மனிதனும் பஞ்சபூதங்களால் ஆனவன் தான். நிலத்தில் விளையும் பொருட்களை அதாவது மண்ணை உண்டு உடம்பை வளர்கிறான். மனித உடல் 70 சதவிகிதம் நீர்ம பொருட்களை கொண்டுள்ளது நீர் அருந்தாமல் வாழ முடியாது. காற்றை சுவாசிக்கிறான். உடலில் நெருப்பு வெப்பம் இல்லாமல் போனால் இறந்து விடுவான். கண்கள் சிறியது பார்வை ஆகாயத்தை விட பெரியது எண்ணங்களும் அதே போன்றுதான். இப்போது பஞ்ச பூதங்களில் ஆன மனித உடல் மட்டுமே இருக்குமானால் அது ஒரு ஜடம். இதன் உள்ளே இவை அனைத்தையும் சீராக வைத்து இயக்கும் ஆன்மா வே கடவுள் சக்தியை போன்றது. இந்த பஞ்சபூதங்களில் ஏதாவது ஒன்று அதிகமானாலும் மனித உடல் நிலை குலைந்துவிடும் அதாவது நோய்வாய்பட்டு இறப்பை எய்திவிடும். இதே போன்றே பிரபஞ்ச பஞ்ச பூதங்களின் நிலை குலைவால் சுனாமி, வெள்ளம், பூகம்பம், சூறாவளி, புயல் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படுகிறது.

இறுதியாக ஒன்று கூறுகிறேன் உதாரணமாக கடவுளை ஒரு கடல் போன்று நினைத்து கொள்ளுங்கள். அவரிடமிருந்து பிரிந்த சிறு துளிகள் தான் நம் ஆன்மா. என்று கூறி விடை பெறுகிறேன். நன்றி...