Results 1 to 1 of 1

Thread: கணிதமும் பிரபஞ்சமும் ஒன்றே

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    24 Aug 2018
    Posts
    5
    Post Thanks / Like
    iCash Credits
    257
    Downloads
    0
    Uploads
    0

    கணிதமும் பிரபஞ்சமும் ஒன்றே

    அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
    நான் இங்கு பகிர போகும் விஷயங்கள் இதற்கு முன்னர் இங்கு யாரேனும் பகிந்தார்களா இல்லையா என்பது எனக்கு தெறியாது. எனக்கு தெறிந்தவற்றை அனைவருக்கும் புரியும் வகையில் அடியேன் விளக்க முயலுகிறேன்.

    நாம் வாழ்கின்ற இந்த பிரபஞ்சம் மிகப்பெரியது இதற்கு எல்லை இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே

    கணிதவியலில் எண்கள் பூஜ்ஜியத்திலிந்து ஆறம்பித்து முடிவிலி வரை உள்ளது உதாரணமாக
    0,1,2,3,....99999999999....முடிவே இல்லாத எண்களாக சென்று கொண்டே இருக்கும்

    நாம் அனைவரும் பள்ளி பருவத்தில் கணிதவியலில் அளவு கோள் உபயோகபடுத்திற்போம். அந்த அளவுகளில் ஒரு சென்டி மீட்டர் என்பது சரியான அளவுதானா என்று கேட்டால் என்னை பொறுத்த வரை இல்லை என்றே கூறுவேன். உதாரணத்துக்கு நம்மளை விட மிக உயரமான பெரிய மனிதன் இந்த பிரபஞ்சத்தில் இருப்பாயானால் அவனுக்கு ஒரு சென்டி மீட்டர் என்றால் நமக்கு நிச்சயம் அது மிக பெரிய அளவாக தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

    உதாரணத்திற்கு அவனுக்கு ஒரு சென்டி மீட்டர் என்பது நமக்கு ஒரு மீட்டராகவும், நமது ஒரு சென்டி மீட்டர் என்பது அவனுக்கு மில்லி மீட்டருக்கும் குறைவான அளவாக இருக்க வாய்புள்ளது.

    சரி ஒன்றுக்கும் மேற்பட்ட எண்கள் இப்படி என்றால். ஒன்றுக்கும் குறைவான எண்கள். உதாரணத்திற்கு
    1,0.9,0.8........0.0000009.......0 பூஜ்ஜியம் வரைக்கும் ஒரு முடிவிலி யாக செல்கிறது. எனவே நம் பிரபஞ்சதில் நம்மளை விட சிறிய ஜீவராசிகளுக்கும் நம்மளுடைய கணித அளவியல் முறை முரணானது. அணுவைவிட சிறிய பொருட்கள் இந்த பிரபஞ்சத்தில் உள்ளது.

    இதே போன்று வேகம் என்று நாம் கூறும் அளவுகளும் சரியானது அல்ல.

    உதாரணத்திற்கு ஒரு 'ஈ' ஆனது 1000 கிலோமீட்டர் தூரத்தை கடக்க ஓரிரு மாதங்கள் எடுத்து கொள்கிறது என்று வைத்து கோள்வோம். ஆனால் உருவத்தில் அதைவிட பெறிய வானூர்தி ஒரு மணி நேரத்தில் இலக்கை அடைந்துவிடும். இப்போது இந்த 'ஈ' க்களை நாமாக நாம் கற்பனை செய்து கொண்டால் நமக்கு 1000 கிலோ மீட்டர் ஒரு மிக பெறிய தூரமே! நாம் அதை ஒளி ஆண்டில் கூட கணக்கிடலாம். உண்மையில் இந்த பிரபஞ்சதில் நம்மளை விட பெரிய ஜீவராசிகள் இருக்குமேயானால் நமது அளவீடுகள் அதாவது நாம் கூறும் ஒளியாண்டுகள் அவர்களுக்கு ஒரு தொலைவாகவே இருக்காது. நமது விமானங்களையும் வானூர்திகளை விட மிக பெரிய பறக்கும் பொருட்கள் அவர்களிடம் இருந்தால் நிச்சயம் அவர்கள் பூமிக்கு வரலாம்.

    இறுதியாக ஒருசில சிறுவயது நிகழ்வான தொலைகாட்சி பெட்டியில் பார்ததை கூறுகிறேன். அனுமான் மற்றும் பூதங்களின் கதை தொடர்களை தொலைகாட்சியில் சிறு வயதில் பார்த்தவர்களுக்கு நான் சொல்ல வருவது பரியலாம். பறக்கும் போது அனுமான் மற்றும் அலாவுதீன் பூதங்கள் பெரிய உருவம் எடுத்த பின்னரே பறப்பார்கள் காரணம் பெறிய உருவம் எடுத்தால் தொலைவும், பயண நேரமும் குறையும்...

    நான் இங்கே பகிர்ந்த விஷயங்கள் யாரையேனும் காயபடுத்திருந்தாலோ அல்லது தவறான தாக தெரிந்தாலோ அடியேனை மன்னிக்கும் படி வேண்டிகொள்கிறேன். முடிந்த வரை எனது அடுத்த பதிவில் தெளிவாக விளக்க முயலுகிறேன்.

    வாய்ப்பு அளித்தமைக்கு அனைவருக்கும் நன்றி...
    Last edited by REASH7; 24-08-2018 at 07:05 PM. Reason: எழுத்து பிழை

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •