பூமி பழையதுதான் ஆனால் அதில்
தோன்றும் உயிர்கள் புதிதல்லவா!

கதிரவன் பழையதுதான் ஆனால் காலையில்
நலம் விசாரிக்க வரும் கதிர்கள் புதிதல்லவா!

ஆழ்கடல் பழையதுதான் ஆனால் நித்தம் நித்தம்
தவழ்ந்து வரும் அலைகள் புதிதல்லவா!

அதுபோல்

உள்ளங்கள் பழையவைதான் ஆனால் அங்கே
உதயமாகும் உறவுகள் (காதல், நட்பு, உறவினர்) புதிதல்லவா!!!