*" அன்னையர் தினம்"*
அன்பு எனும்
அகராதி....
அம்மா எனும்
அவள்......

வாழ்வினில் ஓடிக்கொண்டே
வாழ்க்கைக்கு
பொருளும், அர்த்தமும் தேடி
காலத்தில் நடக்கும்போது
ஏதேதோ கிடைக்கிறது...
நேரத்திற்கும்,
உழைப்பிற்கும்,
கணக்குகளுக்கும்,
வரவுசெலவுக்கும்,
சேமிப்பிற்கும்,
அந்தஸ்திற்கும்,
"பொருள்" கிடைத்தபோதும்
ஏனோ
ஒட்டுமொத்தமான
வாழ்க்கைக்கு மட்டும்
அர்த்தம் கிடைத்தபாடில்லை...
சில சில குழப்பங்கள்
சூழ்ந்தபோதும்

தொழில்நுட்பம்
சிலநேரம்
துணைநிற்கும்போது
அன்னையை
நினைவில் இருத்தி
வாழ்த்தி மகிழும்
இன்பமயமான
கலாச்சார சம்பிரதாயம்
"அன்னையர் தினம்"...

இன்னமும் கொஞ்சம்
ஆழமானால்
அன்பை நினை நிறுத்தும்
அழகான சுகங்கள்....
ஆம்...
அன்பு எனும் அகராதி...
அம்மா அவள்.....
அர்த்தம் தெரிந்த வார்த்தைதான்...
அலங்கார புத்தகம்தான்...

நேரத்தை தானம் கேட்பாள்...
அன்பை உனக்கு கொடுப்பதற்கு...

நேரத்திற்கும், பொருளுக்குமான சமன்பாடு
என்றும் அவளுக்கு புரியப்போவதும் இல்லை...
தேவையுமில்லை...

- குளிர்தழல்..