* கவிஞர்
எழுத்தாளர்
பேச்சாளர்
பட்டிமன்ற நடுவர்
ஆசிரியர்
மனநல ஆலோசகர்
சமூக சேவகர்.

* நெருப்பு நிலா என்ற தலைப்பில் கவிதை மொழியில்
காவியம் வெளிவந்து பலருடைய பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

* தமிழில் கவிக்கோ அப்துல் ரகுமானைத் தொடர்ந்து கஜல் கவிதை நூல்கள் இரண்டு அச்சில்.

* முஹம்மது நபிகளாரின் வாழ்க்கை வரலாற்றை கவிதை வடிவில் மாத இதழ் ஒன்றில் கடந்த மூன்று ஆண்டுகளாய்த் தொடராய் எழுதி வருகிறேன்.

* பள்ளிப் பருவத்தில் பாடப் புத்தகத்தைத் தாண்டி படிக்கத் தொடங்கிய பழக்கம் ஏழாம் வகுப்பிலேயே கவிதை எழுதத் தூண்டிட, இலக்கியத்தின் விரல் பிடித்தேன்.

தொடர்ந்த விடுதி வாழ்க்கையின் தனிமை என் எழுத்துத் தவத்திற்குத் தீனியிட்டது.

* பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது என் முதல் சிறுகதை வெளியானது.

தொடர்ந்து என் கவிதைப் பயணம் தன் முகவரியை எழுதிட இலக்கியக் கடலில் கால் நனைக்கத் துவங்கினேன்.

* பாக்யா வார இதழும் என் கவிதைக்கு அடைக்கலம் தர வெளிச்சப் புள்ளிகளின் விலாசம் தொட்டேன்.

* தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் உலகத் தமிழ் படைப்பாளர்கள் மாநாட்டில் கவிச்சுடர் பட்டம் வழங்கப்பட்டது.

* இப்போதும் ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு இதழில் என் கவிதைகள் தனக்கான சுவடுகளைப் பதித்துக் கொண்டே வருகின்றன.

* கேப்டன் யாசீன் என்ற பெயரில் முகநூலில் பலருடைய பாராட்டுதல்களைப் பெற்று பணிவோடு பயணம் போகிற என் கவிதை வாகனம் இனி தமிழ் மன்றம் வழியாகவும் இதோ.....!

உங்கள் பேராதரவுக்கு மிக்க நன்றி.