பகுத்தறியும் திறனற்ற...
பகட்டுத் தீயே...!

ஆக்கச் சக்திக்கு....
பயன்படு.... தீயே...!

கண் முன் கொல்கிறாய்...!
காண்பதையெல்லாம்...
கவளமென உட்கொள்கிறாய்...!
தீயே... உனக்குத்
திகட்டவே... திகட்டாதா...??!!

ஒன்றும் செய்ய இயலாமல்...
உருக் குலைந்து கிடக்கிறோம்...!
உயிர் வலியால் துடிக்கிறோம்...!

ஆயிரமாயிரம் பேர் - உனை
சபித்தும்.... உனக்கு...
அறிவு வரவில்லையா..!?
அறிவு வளரவில்லையா...?!

ஆங்காரத் தீயே....
அணைந்திடு தீயே...!

கருணை கொள்...
காட்டுத் தீயே...!!

இரக்கம் கொள்....
இறுக்கம் தளர்த்து...!!

உணர்ந்திடு தீயே...!
உருக் குலைக்காமல்...
உயிர் கொல்லாமல்...

ஊறு செய்யாமல்....
உறுதுணையாய் ...
அமைந்திடு தீயே...!
வருந்திடு... தீயே...
திருந்திடு... தீயே...!

தின்ற உயிர்களையெல்லாம்...
திரும்பக் கொணர்ந்திடு.... தீயே…!!