நமது முன்னோர்கள் இந்த ஆங்கில வைத்தியமும், மருந்து மாத்திரையும் இல்லாமல் பல வருடங்கள் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தது நமக்கு தெரியும். அதற்கு காரணம் எந்த ஒரு பக்கவிளைவு இல்லாத நாட்டு வைத்தியம் தான். அவர்கள் பயன்படுத்திய அனைத்து மருத்துவங்களும் இன்றைய தலைமுறையினருக்கு தெரியாது. அந்த வகையில் உடல் வலி, காய்ச்சல், ஜலதோஷம், தும்மல் போன்ற நோய்களை நாட்டு மருந்து கொண்டு குணம் செய்வது குறித்து பார்ப்போம்...

சுக்கு, மிளகு, திப்பிலி, தாளிசபத்திரி, தேவதாரு ஆகியவற்றை சேர்த்து இடித்து பொடி செய்துக் கொள்ளவேண்டும். அதில் ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு 1/8 லிட்டராகச் சுண்டக் காய்ச்சி காலை, மாலை என சாப்பிட்டு வந்தால் ஜலதோஷத்தினால் ஏற்படும் காய்ச்சல் மற்றும் உடல் வலி குறையும்.

கொள்ளை சுத்தம் செய்து தண்ணீர் விட்டு நன்கு வேகவைத்து அவித்துக் கொள்ளவேண்டும். பின்பு அதை வடிகட்டி அந்த தண்ணீரை எடுத்து ரசம் செய்து சோற்றுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஜலதோஷம் மற்றும் தும்மல் குறையும்.

Thanks
IBC Tamil