உனக்கு நினைவிருக்கிறதா?
அன்றொரு நாள் விருந்தினனாய்
உங்கள் வீட்டில் நான்...

மெல்லிய மழையில் நனைந்து
நான் இரவெல்லாம் ஜலதோசித்துக் கொண்டிருக்க
இருளில் யாருமறியாமல்
நீ இதமாய் தடவிய விக்ஸ்..

இப்பொதெல்லாம்
மழையும் ஜலதோசமும் மட்டுமே
மிஞ்சியிருக்கின்றன...
உனது விரல்கள்
வெகுதூரம் சென்று விட்டதால்!