நீண்ட நாட்களுக்குப் (வருடங்களுக்கு) பிறகு மீண்டும் மன்றம் வந்திருக்கிறேன்.

பழைய நண்பர்களுக்கு வணக்கம்.. புதிய நண்பர்களுக்கு சின்னதாய் ஒரு அறிமுகம்.

சென்னையில் பட்டயக்கணக்காளன்.. தமிழில், கண்ணதாசனில் ஆர்வம் மிகுதி.. சுஜாதாவின் தாசன்.. பாலகுமாரனிடம் பாசம் மிக்கவன்...

சின்னச்சின்ன கவிதைகளை மன்றத்தில் முன்பு பதித்திருக்கிறேன்.

இதையெல்லாம் விட “இளசு”வின் தூரவிரல் என்றழைக்கப்பட்டதில் மிகவும் மனம் நிறைந்தவன்.