வார்த்தைகளும் இதை வணங்கும்!
கவிதைகளும் விதையாய் விளங்கும்!
அமிழ்தென்றும் இதற்கீடில்லை!
தமிழ்மொழி போல் இனி வேறில்லை!

இலக்கியம் என்றொரு சாலையில்
தமிழன்னை நடை போட்டாளே!
அன்னையென சொன்னாலுமே
என்றும் அவள் ஒரு கன்னியே!

மெல்லினங்கள் ஒரு மேகலை! அவள்
வல்லினங்கள் மின்னும் பொன்னாரம்!
இடையினம் கொண்ட தேவதை!
தமிழ் அவள் கலைகளின் சாரம்!

கவிதையின் மொழிநடைச் சிறப்பினில்
குழந்தையின் மழலைச் சிரிப்பாவாள்
இசை வடிவம் கொண்ட தெய்வமே!
நாடகமே அவள் கோயில்!