காதலன்:

என் காதல் தாரகையே!
அதிகாலை தாமரையே!
நான் இலையா தண்ணீரா?
உன் வேரா சூரியனா?

காதலி:

ஒரு பூவாய் நானிருந்தால்
உன் பூஜையில் இடம் பெறுவேன்!;
பூங்காற்றாய் நான் வந்தால்
உன் மூச்சினில் கலந்திருப்பேன்!

காதலன்:

சுடுகின்ற இதயம் உன் இமை விசிறியில் குளிராதோ?
தொடுகிற இடங்களில் காதலின் வரைபடம் தோன்றாதோ?

காதலி:

காதலில் பேசும் வார்த்தைகள் யாவும் கவிதைகளே!
கதைகள் பாதி! விதைகள் பாதி! - உன் கவிதையிலே!
என் பார்வை விரிகிறதே! உனைத்"தேடி அலைகிறதே!
கருவிழியே தொலைந்து விட்டால்
கண்ணிமையின் தேவையென்ன?

காதலன்:

தனிமையில் காதலை மனதுக்குள் உன்னிடம் சொல்கின்றேன்!

காதலி:

உன் விழி பார்க்கையில் வாய் வந்த வார்த்தையை கொல்கின்றேன்!

காதலன்:

உதடுகள் நான்கும் தழுவிடும் நேரம் விழி மூடு!:

காதலி:

பார்வைகள் பேச உன் வாய்மொழிக்கெல்லாம் தாழ் போடு!

காதலன்:

நம் காதலின் முதல் வரியை
கண்ணீரில் எழுதுகிறேன்!
அந்த கலிதையின் கடைசி வரி
கடல் நீராய் பெருகுதடி!

காதலி:

கண் கொண்ட காதலை வாய்மொழி லார்த்தையில் சொல்லிவிடு!
பெண் கொண்ட நாணத்தை "உன் விழி பார்வையில் கிள்ளிவிடு!

காதலன்:

இரு விழி பார்த்து இதயத்தின் பாரம் குறைந்திருப்பேன்!
இனி வரும் காலம் உன் இதழ்களின் ஓரம் குடியிருப்பேன்!