நான்:

காதல் கண்ணீர் காயலியே! அந்த
காயம் இன்னும் ஆறலியே!
ஏண்டா இந்த சோகம்?? இனியும்
வேண்டாம் இந்த பாரம!
உன் கண்ணோடு ஒரு காதல் பூ பூத்தாச்சு!
அது முள்ளாச்சு! அந்த பூவின் வாசம் எங்க போச்சு?

காலு ரெண்டும் கோலம் போட
கண்ணு ரெண்டும் தூண்டில் போட
நம்பி கெட்டு போன மனசு
ரெண்டுங் கெட்டான் ஆன வயசு
கம்மாயில வந்த தண்ணி
வெள்ளாமைக்கு போயி சேரும்!
கண்ணுக்குள்ள வந்த கண்ணீர்
என்னத்துக்கு ஆகும் ஆகும்?
காதல் ஒரு சாபம்! அது வந்தா
பெரும் சோகம்!
எந்த கானல் நீரில் தீரும் தாகம்?

நண்பன்:

உன்னக் கேட்டா இதயம் துடிக்கும்?
கண்ணக் கேட்டா இமையும் அடிக்கும்?
காதலுக்கு கட்டுப்பாடு
சொன்னதெல்லாம் பட்டிக்காடு!
ஆண்டவனும் பூமியில் இல்ல!
இருந்துவிட்டு போனத சொல்ல
காதல் தானே இன்னமும் இருக்கு!
இதுக்கு மேல வேறென்ன உனக்கு?
தேடி கீடைக்காது! உயிர் நாடி
துடிக்காது!
அந்த காதல் இங்கு தீரும்போது!