ஐந்து வாரத் தொடர்
வாரம் ஐந்து (நிறைவுப் பகுதி)

கடத்தலுக்கு கெட்டிக்காரன்

ஆர். தர்மராஜன்

___________________________________________________________________________
முன்கதை சுருக்கம்: லைலாவை வைத்து பணம் பார்த்தது போல...
அடுத்த திட்டம் தயார் செய்கிறான் செல்வா.

___________________________________________________________________________

“யோசிப்போம்,“ என்றான் செல்வா. “உங்க அப்பா அம்மாவுக்கு உன்மேல எந்த சந்தேகமும் வரலியே?”

“எப்படி வரும்?”

“வாய்ப்பிருக்கு, கௌதம். இதுக்கு முன்னால மூணு பொண்ணுகளோட பேரையும் உங்க அப்பாகிட்ட

சொல்லியிருக்கே, ரைட்டா?”

“அதனால?”

“அதனாலத்தான் கேக்கறேன்... அவர் சந்தேகப் படலையா? உன்னை எதுவுமே கேக்கலையா?”

“கேட்டாரு. ஒவ்வொரு தடவையும் நம்ம கைக்கு பணம் வந்து... பொண்ணு அவங்க வீட்டுல பத்திரமா

சேர்ந்து... நானும் அவளை மறந்துட்ட பின்னாடி... அவளப் பத்தி அப்பா கேட்டார்... நானும் முகத்துல

சோகத்தைப் பவுடர் போலப் பூசிக்கிட்டு... அவ வீட்டில அவளை வேற ஒருத்தனுக்கு நிச்சயம்

பண்ணிட்டதா சொல்லி... விஷயத்தைக் க்ளோஸ் பண்ணிட்டேன்.”

“லைலா விஷயத்துல?”

“அப்படியேதான் நடக்கப் போகுது.”

“சரி, கௌதம். உன்னை ரொம்ப நாளா ஒண்ணு கேக்கணும்னு...”

“கேளேன்.”

“நாங்கதான்... இல்லாமை காரணமா... பணத்துக்காக சின்ன திருட்டுல ஆராம்பிச்சு இப்படி

கடத்தல் வரைக்கும் வந்துட்டோம். உங்கப்பா கோடீஸ்வரர். உங்க அம்மாவும் பணக்கார

குடும்பத்தை சேர்ந்தவங்க. நீ எங்ககூட சேர்ந்து சட்டவிரோதமான காரியம் பண்ணனுமா?”

“ஒரு த்ரில்தான், செல்வா.”

“கடத்தப்பட்ட பொண்ணுகளோட நிலைமையை நீ எப்போவாவது யோசிச்சுப் பாத்திருக்கியா?”

“அதெல்லாம் எனக்குத் தேவையில்லை.”

“நம்மள யாராவது கடத்திட்டுப் போய் பணம் கேட்டா?”

“எனக்கு அப்படி நடந்தா... கோடிக்கணக்குல கேட்டாலும் எங்கப்பா தருவார். ஆனா நாம

ஒண்ணும் அநியாயத் தொகை கேக்கலையே... கோடி கொடுக்க முடிஞ்சவன்கிட்டயே லட்சம்தான்

கேக்கறோம்.”

திடீரென்று கைதட்டினான் செல்வா. உடனடியாக... சுவர்களுக்குப் பின்னாலிருந்து...

திடாதிகாரமான ஆண்கள் நான்கு பேர் வந்தனர். இவர்கள் இருவரையும் சுற்றி நின்றனர்.

கைத்துப்பாக்கிகள் பிடித்திருந்தனர்.

கௌதம் குழப்பமாகப் பார்க்க... திடீரென்று செல்வா கையிலும் ஒரு ரிவால்வர் முளைத்தது.

“கௌதம்... அடுத்த அத்தியாயம் பத்தி கேட்டியே... இதுதான் அது. நானும் சைமனும் ஜெனியும்

போட்ட ப்ளான்... இவங்க நாலு பேரும் எங்களுக்கு உதவி... இப்ப உன்னைக் கடத்தியிருக்கோம்.”

விருட்டென எழுந்தான் கௌதம். “என்ன... ஜோக்கா?”

பதட்டப்படாமல் பேசினான் செல்வா. “உன்னை அடைச்சு வெச்சு... உங்கப்பாவுக்குத் தெரிவிப்போம்.

பணம் எவ்வளவு கேக்கப் போறோம் தெரியுமா? மூணு கோடி. உங்கப்பாவையே கொண்டு வந்து

குடுக்க சொல்லுவோம். பணம் கைக்கு வந்தா... உன்னை பத்திரமா ரிலீஸ் பண்ணிடுவோம்.

அதுக்கப்புறம் நீ எங்களைப் பாக்கவே மாட்டே. பணம் கிடைக்கலைன்னா... உன்னைக் க்ளோஸ்

பண்ணிட்டு... எஸ்கேப் ஆயிடுவோம்.”

பேசிக்கொண்டே செல்வா ஜாடை காட்ட... கையாட்களில் ஒருவன் ஒரு சிறிய ஸ்ப்ரே டப்பாவிலிருந்து

மயக்க வாயுவை கௌதமின் மூக்குக்குள் துல்லியமாக அடித்தான். மரம்போல் சாய்ந்து விழுந்தான் கௌதம்.

(முற்றும்)