ஐந்து வாரத் தொடர் - வாரம் நான்கு

கடத்தலுக்கு கெட்டிக்காரன்

ஆர். தர்மராஜன்


________________________________________________________________________________________
முன்கதை சுருக்கம்: கௌதம் பணத்தைக் கொடுத்ததும்... கடத்தல்காரர்களில் இருவர்
லைலாவை பைக்கில் ஏற்றிச் செல்கின்றனர்... கௌதமை மற்ற கடத்தல்காரனுடன் விட்டுவிட்டு.

________________________________________________________________________________________

கௌதம் பேசினான். “செல்வா... நான் கொண்டுபோய் அவளை அவங்கப்பாகிட்ட விட்டாத்தானே...”

“அங்கதான் நம்ம திட்டத்தில ஒரு சின்ன மாற்றம்,” என்றான் செல்வா. அருகில் இருந்த ஒரு திட்டில்

உட்கார்ந்தான். “உக்காரு, கௌதம்.”

“மாற்றமா? நோ... லைலாவோட அப்பாவுக்கு சந்தேகம் என்மேல வர வாய்ப்பிருக்கு,” என்றான் கௌதம்,

செல்வாவுக்கு அருகில் உட்கார்ந்தபடி.

“வராது. ஏன்னா... நீ பணத்தோட புறப்பட்ட உடனேயே... நான் அவருக்கு போன் பண்ணி... பொண்ணை

அவரே வந்து கூட்டிக்கிட்டுப் போகணும்னு சொல்லிட்டேன்.”

“ஒத்துக்கிட்டாரா?”

“ஒத்துக்காம? பொண்ணு பத்திரமா வேணும்னா... அவரே வரணும்னு சொல்லிட்டேன்.”

“நம்பினாரா?”

“மெயின் ரோட்டில... நான் சொன்ன ஸ்பாட்டுக்கு வந்ததுமே எனக்கு போன் பண்ணினார். நம்பலைன்னா

வந்திருப்பாரா?”

“செல்வா... எனக்கொரு யோசனை. பணம் அதிகமா வாங்கியிருக்கலாமோ?”

“ஏன்? ”

“பத்து லட்சம் அவருக்கு பாகெட் மணிப்பா.”

“பத்து லட்சம் அவர் வீட்டில கேஷா வச்சிருக்க வாய்ப்பு இருக்கு. அப்படி இல்லைன்னாலும்... அதை

அவர் பாங்க்ல டிரா பண்ணினான்னா யாருக்கும் சந்தேகம் வராது. அவர் ரேஞ்சுக்கு ஏதோ பிசினஸ்

தேவைக்கு பணம் எடுக்கறார்ன்னுதான் பாங்க்ல நினைப்பாங்க. ஆனா... நாம ரொம்ப அதிகமாக்

கேட்டா... அவர் வீட்டுல அது இல்லாமப் போனா... அவ்வளவு பெரிய தொகையை அவர் டிரா

பண்ணினா... பாங்க்ல சந்தேகம் வரலாம். உடனேயே பாங்க மனேஜர் போலீசை காண்டாக்ட் பண்ணலாம்...

அது நமக்கு ஆபத்து... புரியுதா?”

“ம். ஆனா... பொண்ணு கிடைச்சப்புறம்... அவர் பணத்தை மீட்க ட்ரை பண்ணுவார்... அதுக்கு

போலீஸ்கிட்ட போனாலும் போவார்.”

“மாட்டார். ஏன்னா... அவருக்கு நான் போன் பண்ணி பேசினப்ப... இந்தப் பணத்தை மறந்துடவும்

சொல்லிட்டேன். பொண்ணு கிடைச்சப்புறம்... பணத்தை மீட்க ட்ரை பண்ணினா... பொண்ணு உயிருக்கு

ஆபத்து நிச்சயம்னு எச்சரிக்கையும் கொடுத்துட்டேன்.”

“ம்... சரி... உன்னோட கணக்கு தப்பாதுன்னு நம்பறேன். மறந்துடாதப்பா... என் பங்கு ரெண்டு லட்சம்.”

“வாங்கிக்க... அதுக்கு முன்னாடி கொஞ்சம் பேசணும்.”

“தெரியும். அடுத்த அத்தியாயம் தானே? நம்ம பிளான்படி... நான் லைலாவை மறந்துட்டு... வேற ஒரு

பணக்காரப் பொண்ணுகிட்ட டீசன்டாப் பழகி... அவளைக் கவரணும்... அப்புறம், கல்யாணம் பண்ணிக்க

அவ சம்மதம் தெரிவிச்சதும்... அவளை நீங்க கடத்திட்டுப் போக நான் மறைமுகமா உதவணும்... பணம்

கேட்டு நீங்க அவ வீட்டை மிரட்டி... பணத்தை எங்கிட்ட குடுத்து அனுப்ப சொல்லுவீங்க... நானும் கூரியரா

மாறி... பணத்தைக் கொண்டுவர... என்ன சரியா?”

“மனப்பாடம் பண்ணி வச்சிருக்கியே.”

“இந்த வரிசைல லைலா நாலாவது... நம்ம திட்டம் எனக்கு அத்துபடி. தூக்கத்துல எழுப்பிக் கேட்டாலும்...

மிஸ்டேக் இல்லாம சொல்லுவேன். ஓகே... அஞ்சாவது அத்தியாயம் எங்க? ஒரு சேஞ்சுக்கு... தமிழ்நாட்டை விட்டு

வேற ஸ்டேட்... என்ன சொல்லறே?”

(... தொடரும்)
______________________________________________________________________________________________________________