Welcome to the தமிழ் மன்றம்.காம்.
Results 1 to 3 of 3

Thread: சீக்கிரம் வளரணும்..

                  
   
   
 1. #1
  இளம் புயல் பண்பட்டவர்
  Join Date
  28 Jan 2010
  Location
  சிங்கப்பூர்
  Posts
  229
  Post Thanks / Like
  iCash Credits
  22,543
  Downloads
  16
  Uploads
  0

  சீக்கிரம் வளரணும்..

  “விருப்பமானதை சாப்பிடக்கூட முடியவில்லை சீ இதெல்லாம் ஒரு வாழ்வா?” கோபமாக வந்தது ராமுவுக்கு. பிக்கி ஈட்டர்ன்னு பேரு வச்சி பிடிக்காததெல்லாம் தட்டுல வச்சி சாப்பிட்டே ஆகனுன்னா, எப்படி சாப்பிடுறது? ச்சே… சின்ன பிள்ளையாவே பிறக்க கூடாது, டூ டிரபிள்சம். சின்ன பிள்ளையா பிறக்காம வேற எப்படி பிறப்பாங்களாம்? என்றும் தோன்ற லேசாக சிரிப்பும் வந்தது.
  எங்கம்மா, நல்லா சாப்பிடலன்னா உடலுக்கு சக்தி கிடைக்காதுன்னு ஆரம்பிச்சு ஒரு மினி டைஜஷன் வகுப்பே எடுப்பாங்க. இவங்க என்னை சாப்பிட வைக்குறதுக்காகவே அறிவியல் படிச்சாங்களோன்னு இருக்கும். அப்பா ரொம்ப ஸ்டிரிக்ட். சாப்பிட்டே ஆகனும்னு வற்புறுத்தல். வயிறு நிறைய சாப்பிட்ட பின்னும் அது போல இன்னொரு அளவு சாப்பிட சொல்லி பாடாய் படுத்துவார். லீவு நாளுன்னா நான் தொலைஞ்சேன், தட்டு நிறைய சாப்பாடு போட்டு முழுக்க முடிக்கிறவரை அவரே ஊட்டுவார்.
  எனக்கு மட்டும் பவர் இருந்தா அவருக்கு மூன்று ஃபுல் மீல்ஸ் வாங்கி தந்து ஃபினிஷ் பண்ணிட்டு தான் எழுந்திரிக்கனும்னு ஃபோர்ஸ் பண்ணுவேன். அப்ப தெரியும் என் கஷ்டம் என்னன்னு.
  அப்படியெல்லாம் நான் ஒன்னும் பெரிய அண்டர்வெயிட் இல்ல. ஒன்பது வயசு, எடை 20 கிலோ. பள்ளி குறிப்பெட்டில் ஒத்துக்கொள்ளகூடிய எடைன்னும் இருக்கு. ஆனா அவர் மட்டும் ஒத்துக்க மாட்டார்.
  போன மாதம் எனக்கு ஜுரம் அடித்து விட்ட பின் இன்னும் மெலிஞ்சுட்டேன். சும்மாவே சாமியாடும் அப்பா தினம் பேயாட்டம் ஆட அரம்பிச்சுட்டார். அதன் பலனாக தினமும் ருசியே தெரியாத மருந்து சாப்பிட்டு மறத்த நாக்குடன் நிறைய சாப்பிட வேண்டியதாயிற்று. அப்புறமும் எடை துளிகூட ஏறல. எனக்கு ஏதோ உடற்குறை இருக்கிறதா நானே நம்ப ஆரம்பிச்சுட்டேன்.
  நல்லவேளை பாட்டி தான் சொன்னாங்க எடையப் பத்தி கவலைபடாதடா நல்லா ஓடி விளையாடு பசிச்ச பின் உனக்கு பிடிச்சதை சாப்பிடு. உடம்பு ஆரோக்கியமா இருக்கும், பயப்படாதே, உனக்கு ஒன்னுமில்லன்னு.
  எனக்கு மைலோ ரொம்ப பிடிக்கும், சிக்கனும், முட்டையும் கூட பிடிச்சுது ஒரு நாள் அண்ணாவின் வாட்சாப் குரூப்ல அந்த மெசேஜ் பாக்குற வரை…”இன்னிக்கு அம்மாவையும் பிள்ளையையும் சாப்பிட்டோம்”னு கொடுமையா எழுதி இருந்தாங்க. அப்புறம் விட்டுட்டேன். மட்டன் பிடிக்கும் ஆனா வாரம் ஒரு நாளுக்கு மேல சாப்பிட்டா நல்லா இல்லை. கீரை, பூரி, ரோட்டிப்ராட்டா, தோசை, நூட்ல்ஸ், சாம்பார், தயிர் சாதம், பச்சை ஆப்பிள், திராட்சை, தர்பூசணி , கோன் தோசை, ப்ரெட், டொமேட்டொசாஸ் னு என் லிஸ்ட்ல இன்னும் நிறைய இருக்கு.
  இதுல எல்லாம் எந்த சத்தும் இல்லன்னு அப்பா சொல்வார். “சத்து இல்லனா ஏன் ஃபுட் பிரமிட்ல போட்டு உலக உணவு கழகம் பரிந்துரை செஞ்சிருக்கு” னு நான் கேட்டதுக்கு அவர் இன்னும் பதில் சொல்லவேயில்ல. அதன் பிறகு அவர் எந்த காரணமும் இல்லாம கத்துறதா தோணுது.
  நான் கோயிலுக்கு போயி வேண்டிக்கிறது எல்லாம் அப்பா வீட்டுக்கு வந்தா அமைதியா இருக்கனும் சாமின்னுதான். ஆனா சாமி தான் பாவம் பிசியா இருக்கு போல அதான் இன்னும் செய்யல. நான் சீக்கிரம் வளரணும்….
  வாழ்க வளமுடன்
  என் தமிழ்ச்சோலை...

 2. #2
  இளம் புயல் பண்பட்டவர்
  Join Date
  23 Sep 2010
  Location
  பஹ்ரைன்
  Posts
  476
  Post Thanks / Like
  iCash Credits
  13,995
  Downloads
  4
  Uploads
  0
  அட..அருமை.

  சொந்தமா எழுதுறீங்களா..? இல்லை யாரையாவது தழுவி எழுதுறீங்களா?

  பாராட்டுக்கள்..

 3. #3
  இளம் புயல் பண்பட்டவர்
  Join Date
  28 Jan 2010
  Location
  சிங்கப்பூர்
  Posts
  229
  Post Thanks / Like
  iCash Credits
  22,543
  Downloads
  16
  Uploads
  0
  நன்றி dellas!
  இது என் சின்ன மகனுடைய நிதர்சனம். சிங்கப்பூர் கதைக்களம் போட்டிக்காக எழுதியது. பரிசு வரலை. மன்றத்தில் பதிவிட்டேன்.
  வாழ்க வளமுடன்
  என் தமிழ்ச்சோலை...

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  

Unicode Converter
TSCII
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM