மெய்திறந்து மெல்ல விரிகிறது விழிகள்..

நெடுவானம் வீற்றிருக்கும் ஏகாந்தமதி...
சலனமற்ற நீலவானம்..
தீண்டிச்செல்லும் தென்றல்...
மெல்ல அசையும் கீற்று...
ஆழ்ந்த உறக்கத்தின் மடியில் உலகம்!

ஆயிரம் காவியங்களை கண்ட ஆழ்ந்தகளைப்பிலும்
மந்தகாசப்புன்னகையுடன் ஒளிர்ந்துகொண்டிருக்கிறது வெண்மதி!

எதற்காக இப்படியொரு மௌனமழையை பொழிந்துகொண்டிருக்கிறது...

இது ஏக்கமா... இதயத்தின் வலியா...
வாஞ்சையா... மறுதலிப்பா???

யாரைத்தேடி இந்த இரவு முழுவதும்
இப்படியொரு ஒய்யாரக்கோலம்கொண்டு பயணிக்கிறது...

கேள்விகளால் இதயம் விம்மிய நொடிகளில்
என் உலகம் வாஞ்சைகளில் சஞ்ஜரிக்கிறது...

முதல் கனவு...முதல் ஆசை...முதல் மயக்கம்...
முதல் ஆண்மை... முதல் கர்வம்...
எங்கோ வழிப்பயணத்தில் தவறவிட்ட இதயம்...

கிளைகளாய்.. பாதைகளாய்...குறுக்குகளாய்...சந்தடியாய்...
திரும்பிப்பார்க்கையில் தொலைந்துபோன தவறிப்போன
புன்னகையும்... ஆசையையும் தேடுகிறது மனம்....

இப்போது எப்படி இருக்கும் அவள்முகம்...!!!