ஐந்து வாரத் தொடர் - வாரம் ஒன்று

கடத்தலுக்கு கெட்டிக்காரன்

ஆர். தர்மராஜன்


“ஹலோ.”

“மிஸ்டர் தனபால்?” என்றது பரிச்சயமில்லாத ஆண் குரல்.

“யெஸ். நீங்க...?”

“உங்க பொண்ணு லைலா... இப்ப எங்க கஸ்டடியில... பத்திரமா இருக்கா.”

“டேய்! யார்ரா நீ?”

“கோடீஸ்வரர் தனபால் அவர்களே... இப்ப உங்களுக்கு ரெண்டு சாய்ஸ் இருக்கு.

ஒண்ணு... உங்க செல் டிஸ்ப்ளேல இருக்கற என்னோட செல் நம்பரை நோட் பண்ணி...

போலீசுக்கு தகவல் சொல்லி... என்னை ட்ரேஸ் பண்ண முயற்சி எடுங்க...

உங்க பொண்ணைப் பத்தின கவலை உங்களுக்கு இல்லைன்னா. ரெண்டு... போலீஸ்

பக்கமே போகாம... நாங்க சொல்லறதைக் கேட்டு நடங்க... உங்க பொண்ணு எந்த

சேதாரமும் இல்லாம உங்ககிட்ட வருவா. ஸோ... தொடர்ந்து பேசவா... இல்லை

போனை வெச்சுடவா?”

“நோ... ப்ளீஸ்! எனக்கு என் பொண்ணுதான் முக்கியம்.”

“குட். கவனமா கேளுங்க. உங்க லைலாவுக்கு ஒரு காதலன்... பேரு மஜ்னு இல்லை...

கௌதம். அவன் செல் நம்பர் இப்ப உங்களுக்கு மெசேஜ்ல வரும். அவனை

நீங்க தனியா அப்ரோச் பண்ணி... லைலா கடத்தப்பட்ட விஷயத்தை சொல்லுங்க.

பத்து லட்சம் ரூபாய் அவன்கிட்ட குடுத்து அனுப்புங்க... எல்லாம் ஐநூறு ரூபாய்

நோட்டுகளா... அவன் தனியா பணத்தோட எங்கள சந்திக்கணும். பணத்தை

வாங்கிகிட்டு... லைலாவை அனுப்பிவைப்போம். புரிஞ்சுதா?”

“சரி. அவன் எங்க வந்து உங்களை மீட் பண்ணனும்?”

“சொல்றேன். மொதல்ல அவன்கிட்ட பேசிட்டு... இந்த நம்பருக்கு போன் பண்ணி

எங்களுக்கு தெரிவிங்க.”

அடுத்த இரண்டு நிமிடங்களில் அவர் செல்லுக்கு மெசேஜ் வந்தது... அதில் கௌதமின்

செல் எண் இருந்தது.

பரபரவென்று செயல்பட்டார் தனபால். கௌதமைத் தொடர்புகொண்டு...

விஷயத்தைச் சொல்லி... அவனைத் தன் அலுவலகத்திற்கு உடனேயே வரச்சொன்னார்.

பத்தரை மணிக்கு அவரது ஏ. சி. அறைக்குள் நுழைந்தான் கௌதம். முகத்தில்

அப்பிவைத்தது போல பதட்டம். பெரிய மேஜையின் இருபக்கமும்... ஒருவரை ஒருவர்

பார்த்தவாறு உட்கார்ந்தார்கள்.

“உன்னைப் பத்தி சுருக்கமா சொல்லுப்பா,” என்றார் தனபால்.

“ஐயாம் கௌதம். எங்கப்பா மிஸ்டர் செல்லதுரை ஒரு பில்டிங் காண்ட்ராக்டர்... ரியல்

எஸ்டேட்டும் டீல் பண்ணறார். லிங்க் பிரமோடர்ஸ்-ங்கற கம்பனியை நடத்திட்டு வர்றார்.

ரெண்டு வருஷம் முன்னாடி நான் சிவில் இன்ஜினீரிங்ல பி. டெக். பாஸ் பண்ணினேன்.

எங்கப்பாவோட சேர்ந்து பிசினசை கவனிக்கறேன்.”

“உனக்கும் என் பொண்ணுக்கும் எத்தனை நாளாப் பழக்கம்?”

“மூணு வருஷம். உங்க டாட்டரும் நானும் ஒரே காலேஜ்ல பி. டெக். படிச்சோம். அவ
எனக்கு ஒரு வருஷம் ஜூனியர்.”

“கல்யாணம் பண்ணிக்கறதா ப்ளானா?”

“ஆமாம்.”

“உங்க அப்பா அம்மாவுக்குத் தெரியுமா?”

“அப்பாவுக்குத் தெரியும். இப்ப உங்க போன் வந்த பின்னாடிதான் சொன்னேன்.”

“அவ கடத்தப்பட்டிருக்கான்னு...”

“சொல்லலை. ஜஸ்ட்... அவளை நான் கல்யாணம் பண்ணிக்க விரும்பறதா
சொன்னனேன்.”

“என்ன சொன்னார்?”

“இன்னக்கி ராத்திரி அதப் பத்தி அம்மாவோட டிஸ்கஸ் பண்ணலாம்னுட்டார்.”

“சம்மதிப்பாங்களா?”

“நம்பிக்கை இருக்கு.”

“அதுக்கு முன்னாடி லைலாவை மீட்டாகணும்.”

“சொல்லுங்க... பணத்தை எடுத்துட்டு... அவங்களை நான் எங்க மீட் பண்ணணும்?”

(...தொடரும்)