ஐங்குறு நூற்றில் மிகவும் அழகாக மூன்றே வரிகளில்
ஒரு வீடியோவை கண்முன் சித்திரிக்கின்றார் அம்மூவனார்..

123.நின்கேள் கடலில் பாய்ந்தாடுவாள்.

கண்டிகு மல்லமோ கொண்க நின் கேளே?
ஒண்ணுதல் ஆயம் ஆர்ப்பத்
தண்ணென் பெருங்கடல் திரைபாய்வோளே.


பரத்தை தலைவனைக் கண்டு இவ்வாறு கூறுகிறாள்
நெய்தல் நிலத்தலைவனே உனக்கு உறவானவளை கண்டிருக்கின்றோம்…
ஒளிபொருந்திய நெற்றியை உடைய தோழியர் கூட்டம் ஆர்பரிக்க குளிர்ந்த
பெருங்கடலில் பாய்ந்தாடுவாள்…ஆதலால் அவளை நன்கு அறிவோம்….

இந்த மூன்று வரிகளில் எத்தனை விபரங்கள்…கவிதையின் அழகே
சுருங்கச் சொல்லி விரிய உரைப்பது தானே..
தலைவனுக்குப் பரத்தையுடனான உறவு
தலைவி மட்டுமல்ல தோழியரும் அழகு மிக்கவர்கள்.
கடலாடும் போது சொற்களாலும் பாட்டாலும் ஓசை எழுப்புவர்
உயர்ந்த அலைகள் வரும் போது ஊசலாட்டம் போல் மனம் மகிழ
பாய்ந்து ஆடுகிறாள் தலைவி தன் தோழிகளுடன்…
ஒண்ணுதல் ..ஒளி பொருந்திய நெற்றி
திரைபாய்வோளே…. உயர்ந்த அலையில் புகுந்து ஊசலாட்டைப் போல
பாய்ந்து மகிழ்பவள்…