Results 1 to 3 of 3

Thread: இடைவெளி (சிறுகதை by ஆர். தர்மராஜன்)

                  
   
   
  1. #1
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    29 Jan 2017
    Location
    Palakkad, Kerala State
    Posts
    33
    Post Thanks / Like
    iCash Credits
    874
    Downloads
    0
    Uploads
    0

    Cool இடைவெளி (சிறுகதை by ஆர். தர்மராஜன்)

    சிறுகதை (113 வார்த்தைகள்) by ஆர். தர்மராஜன்

    இடைவெளி

    “சிந்து, இது கூரியர்ல வந்தது.” ஒரு கவரை நீட்டினாள் விடுதி மனேஜரம்மா.

    வாங்கிக்கொண்டு தன் அறைக்கு விரைந்தாள் சிந்து. கவர் தன் தந்தையிடமிருந்து
    வந்திருந்ததால்... வேலை முடிந்து வந்த களைப்பையும் பொருட்படுத்தாமல்
    கவரைப் பிரித்தாள். அதில் ஒரு காசோலை... கூடவே சுருக்கமாக ஒரு கடிதம்.

    சிந்து,
    இந்த பத்தாயிரம் ரூபாய்க்கு செக்... உனக்குத்தான். உதயாவோட கல்யாணம் போன மாசம்
    நல்லபடியா நடந்தது.
    அப்பா.


    அழுகையை அடக்கிக் கொண்டு... செல்லை எடுத்து அப்பாவிடம் பேசினாள்.

    “ஏம்பா... தங்கச்சி கல்யாணத்துக்கு நான் வரக்கூடாதுன்னு முடிவு எடுத்தீங்க... இல்லையா?”

    “அப்படித்தான்னு வெச்சுக்க!” அப்பாவின் குரலில் கடுமை தெறித்தது.

    “எனக்கு ஏம்பா இவ்வளவு பெரிய தண்டனை?”

    “ஓஹோ... மறந்துட்டியா? சரி... கேட்டுக்க. காலேஜ்ல... படிக்கறதுக்கு பதிலா...
    லவ்வுகிவ்வுன்னு போய்... பிடிவாதமா அவனையே கல்யாணம் பண்ணிட்டு... மூணே மாசத்துல
    டைவோர்ஸ்ல மோதிகிட்டவ நீ. உதயாவோ... எந்த கிளர்ச்சியிலையும் சிக்காம... நல்லா படிச்சு...
    நல்ல வேலைல சேர்ந்து... உன்னால் சரிஞ்ச குடும்ப கவுரவத்தை தூக்கி நிறுத்தினவ.
    உங்களுக்குள்ள இந்த இடைவெளி... எங்களுக்கு எப்பவும்... எதுலேயும் தெரியும்... ∴போனை வை!”

    (முற்றும்)

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    113 வார்த்தைகளுக்குள் ஒரு கதையை கச்சிதமாக முடித்துத் தந்துள்ளீர்கள். அதனுள் ஒரு ப்ளாஷ்பேக் வேறு.

    கதையின் கருத்து மற்றும் முடிவோடு ஒத்துப்போக முடியவில்லை என்றாலும் நல்ல நடைக்குப் பாராட்டுக்கள்.
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    17 Mar 2008
    Posts
    1,037
    Post Thanks / Like
    iCash Credits
    25,717
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by செல்வா View Post
    113 வார்த்தைகளுக்குள் ஒரு கதையை கச்சிதமாக முடித்துத் தந்துள்ளீர்கள். அதனுள் ஒரு ப்ளாஷ்பேக் வேறு.

    கதையின் கருத்து மற்றும் முடிவோடு ஒத்துப்போக முடியவில்லை என்றாலும் நல்ல நடைக்குப் பாராட்டுக்கள்.
    செல்வா அவர்கள் சொன்னதையே நானும் வழி மொழிகிறேன்

    கதையின் கருத்து மற்றும் முடிவோடு ஒத்துப்போக முடியவில்லை. நல்ல நடைக்குப் பாராட்டுக்கள்

    கீழை நாடான்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •