Results 1 to 6 of 6

Thread: பொண்ணு பொறந்த சந்தோஷம் (சிறுகதை by ஆர். தர்மராஜன்)

                  
   
   
  1. #1
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    29 Jan 2017
    Location
    Palakkad, Kerala State
    Posts
    33
    Post Thanks / Like
    iCash Credits
    874
    Downloads
    0
    Uploads
    0

    Cool பொண்ணு பொறந்த சந்தோஷம் (சிறுகதை by ஆர். தர்மராஜன்)

    சிறுகதை (104 வார்த்தைகள்)by ஆர். தர்மராஜன்

    பொண்ணு பொறந்த சந்தோஷம்


    பதினைந்து வருடங்களுக்குப் பிறகு சோளவாசலுக்கு வந்தேன். கிராமம் மாறியாதாகத் தெரியவில்லை.
    மகுடபதியின் வீட்டிற்கு சிரமம் இல்லாமல் வந்து சேர்ந்தேன். சிறிது புதுப்பிக்கப்பட்டிருந்தது வீடு.

    “டோய் சோமு!” என்று ஓடி வந்து கட்டிக்கொண்டான் மகுடபதி. பரஸ்பரம் விசாரித்து முடிந்ததும்
    எனக்கு ஒரு தட்டு நிறைய கேசரி கொடுத்தான். அமிர்தமாக இனித்தது.

    “வீட்ல விசேஷமா?” என்றேன்.

    “கனகாவுக்கு பொண்ணு பொறந்திருக்கு,” என்றான். முகத்தில் சூரிய வெளிச்சத்தின் பிரகாசம்.
    “சந்தோஷத்தக் கொண்டாடத்தான் இனிப்பு. ஏன்னா... இந்தப் பொண்ணு பின்னால எங்களுக்கு
    பொழப்பு தருவா.”

    சோளவாசலில் பெண் சிசுக் கொலைகள் அதிகம் என்று சமீபத்தில் எங்கோ படித்த ஞாபகம்
    உள்ளே கீறியது. பட்டென்று அதைச் சொல்லிவிட்டு, “நீயாவது பொண்ணு பொறந்தா சந்தோஷப்
    படறியே. நல்லதுடா,” என்றேன்.

    உரக்க சிரித்தான். “டோய்... கனகா எங்க வீட்டு பசு மாடுடா. நான் பொண்ணுன்னு சொன்னது
    கனகாவுக்குப் பொறந்த கன்னுக்குட்டிய. பின்னால அது பசுவா வளந்து... கனகா மாதிரியே
    எங்களுக்கு பால் விக்கற பொழப்பு தரும் இல்லியா?”

    (முற்றும்)

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    பசுவுக்குப் பெண்ணென்றால் மகிழ்வோர்,
    தமக்குப் பெண்ணென்றால் கொலைஞ்ஞராகும் சமுதாய சாபம்,
    இப்போது குறைந்து வருவது கொஞ்சம் ஆறுதல்.

    திடீர் திருப்பத்தில், அடித்து விழுத்திவிட்டது கதை.

    வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  3. #3
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    23 Sep 2010
    Location
    பஹ்ரைன்
    Posts
    502
    Post Thanks / Like
    iCash Credits
    39,029
    Downloads
    4
    Uploads
    0
    பல நூற்றாண்டுகள் போராட்டத்தை கண்முன் வந்து போக செய்து விட்டீர்கள், கடைசி வரியில்.

  4. #4
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    29 Jan 2017
    Location
    Palakkad, Kerala State
    Posts
    33
    Post Thanks / Like
    iCash Credits
    874
    Downloads
    0
    Uploads
    0
    அக்னி அவர்களே

    'பொண்ணு பொறந்த சந்தோஷம்' சிறுகதை...

    தங்கள் பாராட்டுக்கு எனக்கு மிகப்எ பெரிய ஊக்காம்ன்... என் மனமார்ந்த நன்றி.

  5. #5
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    29 Jan 2017
    Location
    Palakkad, Kerala State
    Posts
    33
    Post Thanks / Like
    iCash Credits
    874
    Downloads
    0
    Uploads
    0
    'பொண்ணு பொறந்த சந்தோஷம்' சிறுகதை...

    தங்கள் பாராட்டுக்கு எனக்கு மிகப்எ பெரிய ஊக்காம்ன்... என் மனமார்ந்த நன்றி.

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    17 Mar 2008
    Posts
    1,037
    Post Thanks / Like
    iCash Credits
    25,717
    Downloads
    39
    Uploads
    0
    கொஞ்சம் மிகைப்படுத்தலாய் தோன்றுகிறது.

    உங்கள் எழுத்து நடை ரசிக்கும் படி இருக்கிறது. இரண்டே வரிகளில் விசயத்தை சொல்லும் திருக்குறள் போல.

    கீழை நாடான்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •