Results 1 to 6 of 6

Thread: வேலை கிடைச்சிடுச்சு (சிறுகதை by ஆர். தர்மராஜன்)

                  
   
   
  1. #1
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    29 Jan 2017
    Location
    Palakkad, Kerala State
    Posts
    33
    Post Thanks / Like
    iCash Credits
    874
    Downloads
    0
    Uploads
    0

    Cool வேலை கிடைச்சிடுச்சு (சிறுகதை by ஆர். தர்மராஜன்)

    சிறு கதை (130 வார்த்தைகள்) / ஆர். தர்மராஜன்


    வேலை கிடைச்சிடுச்சு


    “நாளக்கி நம்ம பையனுக்கு இன்டர்வியூ. உங்கப்பாவை முதியோர் இல்லத்துல
    விடறதைப் பத்தி முடிவு எடுக்கணும்.”

    “ரெண்டுக்கும் என்ன கனக்ஷன், கோமதி?” என்றார் சண்முகம்.

    “கேளுங்க. இந்தக் கம்பனில பெரிய போஸ்ட்ல இருக்கற ஜேம்ஸ்...
    உங்கப்பாவோட முன்னாள் ஸ்டூடன்ட். ஸோ, உங்கப்பா ஒரு ரெகமெண்டேஷன்
    லெட்டர் கொடுத்தா... மனோஜுக்கு வேலை கிடைச்சுடும். பாவங்க... அவனும்
    மூணு வர்ஷமா கஷ்டப்படறான்.”

    “அப்பா ஒத்துக்க மாட்டார்னு தெரியாதா?”

    “பாருங்க, லெட்டர் குடுத்தா உங்கப்பா நம்மகூட இருக்கலாம். இல்லைன்னா
    முதியோர் இல்லம்தான்... சொல்லிட்டேன்.”

    அன்றிரவு தூக்கத்தில் பாதியைத் தியாகம் செய்து அப்பாவை சம்மதிக்க
    வைத்தார் சண்முகம்.

    மறுநாள் இன்டர்வியூ முடிந்து... மதியம் சந்தோஷச் செய்தியுடன் திரும்பினான்
    மனோஜ்.

    கோமதிக்கு முகமெல்லாம் பளிச். “அப்பா நம்மகூடவேதான் இருக்கணும்...
    சொல்லிட்டேன்,” என்றாள்.

    மாலை தாத்தாவுடன் வாக்கிங் போனான் மனோஜ்.

    “முகம் வாடியிருக்கே தாத்தா. லெட்டர் விஷயம் உங்களுக்கு வருத்தம்தான்,
    இல்லையா?”

    “இருக்காதாடா? நான் இதுவரைக்கும் யாருகிட்டேயும் எதுக்காகவும்-”

    “தெரியும் தாத்தா. அதனாலத்தான் அந்த லெட்டரை மிஸ்டர் ஜேம்ஸ்கிட்ட தரலை.
    கிழிச்சுப் போட்டுட்டேன்.”

    தாத்தா முகத்தில் சட்டென்று பிரகாசம்.

    “ஆனா இது நமக்குள்ளயே இருக்கட்டும் தாத்தா... சரியா?” தாத்தாவை
    முதியோர் இல்லம் எனும் சாபத்திலிருந்து காப்பாற்றியதுதான் அவனுக்கு
    வேலை கிடைத்ததை விடப் பெரிய சந்தோஷம்.

    (முற்றும்)

  2. Likes MKVELU, dellas liked this post
  3. #2
    புதியவர்
    Join Date
    14 Mar 2017
    Posts
    1
    Post Thanks / Like
    iCash Credits
    205
    Downloads
    1
    Uploads
    0
    அருமையான சிந்தனை. பெரியவரின் அனுபவமும் , ஆதரிப்பும், இளைஞரின் தன்னம்பிக்கையும், சூட்டிகையும் கதை அருமையாக பிரதிபலித்திருக்கிறது. வாழ்த்துக்கள் !

  4. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    வேறுபட்ட கற்பனையில் விளந்துநிற்கும் கதை.

  5. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    நல்லாருக்குங்க... கடுகு சிறுத்தாலும் காரம் குறையவில்லை. கதையும் மனோஜ்ம்.

    வாழ்த்துக்கள்.
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  6. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    17 Mar 2008
    Posts
    1,037
    Post Thanks / Like
    iCash Credits
    25,717
    Downloads
    39
    Uploads
    0
    மிக சிறிய கதையிலேயே பெரிய விசயங்களை சொல்லும் தன்மை அபூர்வமானது. பாராட்டுக்கள்

    கீழை நாடான்

  7. #6
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    28 Jan 2010
    Location
    சிங்கப்பூர்
    Posts
    234
    Post Thanks / Like
    iCash Credits
    31,891
    Downloads
    21
    Uploads
    0
    அருமையான கதை! மனதின் மெல்லிய வருத்தம், மலர்வு, நிறைவு எல்லாம் கண்முன் காட்டிவிட்டது இந்த கதை! தாத்தாவின் மேல் பாசம் உள்ள பேரனுக்கு ஒரு சலாம். வாழ்த்துக்கள் ஆர். தர்மராஜன்!

    Quote Originally Posted by hypergraph View Post
    சிறு கதை (130 வார்த்தைகள்) / ஆர். தர்மராஜன்


    வேலை கிடைச்சிடுச்சு




    “முகம் வாடியிருக்கே தாத்தா. லெட்டர் விஷயம் உங்களுக்கு வருத்தம்தான்,
    இல்லையா?”

    “இருக்காதாடா? நான் இதுவரைக்கும் யாருகிட்டேயும் எதுக்காகவும்-”

    “தெரியும் தாத்தா. அதனாலத்தான் அந்த லெட்டரை மிஸ்டர் ஜேம்ஸ்கிட்ட தரலை.
    கிழிச்சுப் போட்டுட்டேன்.”

    தாத்தா முகத்தில் சட்டென்று பிரகாசம்.

    “ஆனா இது நமக்குள்ளயே இருக்கட்டும் தாத்தா... சரியா?” தாத்தாவை
    முதியோர் இல்லம் எனும் சாபத்திலிருந்து காப்பாற்றியதுதான் அவனுக்கு
    வேலை கிடைத்ததை விடப் பெரிய சந்தோஷம்.

    (முற்றும்)
    வாழ்க வளமுடன்
    என் தமிழ்ச்சோலை...

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •