ஒரு நிமிடக் கதை / ஆர். தர்மராஜன்

குறை

காலையில் வினோதினி படபடவென பேசியது ... இன்னும் அஜித் காதில்
ஒலித்தது.

“மிஸ்டர் அஜித்... போன வாரம் என்னைப் பொண்ணு பாத்துட்டு...
ரொம்பப் பிடிச்சுதுன்னு நீங்களும் உங்க பேரண்ட்ஸும் சொன்னீங்க. ஆனா…
நான் இன்னொருத்தரை... புரியுதா? அதை இப்ப எங்க வீட்டுல சொல்ல முடியாத
சூழ்நிலை. ஸோ, உங்களுக்கு விருப்பம் இல்லைன்னு நீங்களே என் அப்பாகிட்ட
சொல்லுங்க. அதுக்கான ஒரு காரணமும் நீங்கதான் உண்டாக்கணும். ப்ளீஸ்…
இது எனக்கு வாழ்வா சாவாங்கற இஷ்யு... குட்பை.”

காரணம் கண்டுபிடிக்க ஒரு நாள் மூளையைக் கசக்கியதில் அஜித்துக்கு ஒரு
யோசனை தட்டியது. வினோதினியின் தந்தைக்கு போன் செய்து பேசினான்.

“குட் மார்னிங் சார், நான் அஜித்...”

“சௌக்கியமா தம்பி? அப்பா அம்மா நல்லா இருக்காங்களா?”

“எல்லாரும் நல்லா இருக்காங்க சார். வந்து... ஒரு விஷயம்...”

“சொல்லுங்க தம்பி.”

“சார்... நான் கவர்மென்ட்ல என்ஜினீயர் போஸ்ட்க்கு அப்பளை பண்ணினேன்...
போன மாசம் டெஸ்டும் இன்டர்வியுவும் நடந்தது... போஸ்ட் கிடைக்கும்ங்கற
நம்பிக்கைலதான் உங்க பொண்ணைப் புடிச்சிருக்குன்னு சொன்னேன். ஆனா
இன்னிக்கி ரிசல்டப் பாத்தா... நான் செலக்ட் ஆகலை. என்னதான் நான் ஐ. டி.
கம்பனில நல்ல சம்பளத்தில இருந்தாலும், கவர்மென்ட் ஜாப் கிடைக்காதது
பெரிய குறைதான். ஸோ, உங்க பொண்ணுக்கு வேற நல்ல இடத்துல...”


(முற்றும்)

அடுத்த வாரம் ... ஜெயில் பாதுகாப்பானது