நெற்றி முத்தத்திலும்
தலைக்கோதலிலும்
மடி சாய்ந்ததிலும்
என் தாயை
நினைவூட்டாமல் நீ
இருந்திருந்தால்

ஐஸ்கிரீம் சண்டையிலும்
ஜீன்ஸ் பேண்ட் தேர்விலும்
என் தங்கையை
நினைவூட்டாமல்
இருந்திருந்தால்

புகைப்பதை பார்க்கையிலும்
குடிக்கையில் அடிக்கையிலும்
என் தந்தையை
நினைவூட்டாமல்
இருந்திருந்தால்

நிச்சயம் தூக்கி
எறிந்திருப்பேன் இந்த
காதலில்
ஒன்றுமேயில்லை என
ஆனால் உன்னை
அனைத்துமாய் பார்த்துவிட்டேன்
அதில்தான் தோற்றுவிட்டேன்

- கவியரசன்