Results 1 to 2 of 2

Thread: ஒரு உண்மை காதல் கதை

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    30 Aug 2016
    Location
    TIRUNELVELI
    Age
    30
    Posts
    14
    Post Thanks / Like
    iCash Credits
    575
    Downloads
    0
    Uploads
    0

    ஒரு உண்மை காதல் கதை

    ***ஒரு உண்மை காதல் கதை ***


    "அம்மா நான் கிளம்பறேன்"அம்மா-பாத்துபோயிட்டுவா.
    "சரிம்மா"ஐயோ அவள் கிளம்பி போய் பத்து நிமிஷம் ஆச்சி.மிதிவண்டியை வேகமாக மிதித்துகொண்டு கிளம்பினேன்.இரண்டு தெரு முடித்து மெயின்ரோடை தொடும் வரை என்னமோ பந்தய ஓட்டம் போல மிதித்தேன்.ஸ்ஸ்ஸ் மெயின்ரோடு வந்தாச்சி அவளை காணலியே எங்கே?

    திரும்பினால் அவள் நண்பிகளுடன் என்னை கடந்து செல்கிறாள்.அவள் கடந்து போகும்போது ஒரு கடைபார்வை என்னை பார்ப்பாள்.அந்த ஒரு பார்வைக்காக காலையிலும் மாலையிலும் நான்நிற்பது தொடர்ந்தது.அந்த பத்தாம்வகுப்பிலேயே படிப்பை தவிர மற்ற விஷயங்களே எளிதாக என்னுள் சென்று கொண்டு இருந்தன.இதற்கும் பக்கத்துக்கு வீட்டில் இருக்கும் அவளிடம் இதுவரை பேசமுடியவில்லை.என்னசெய்யலாம்ம்ம் நான் இங்கு என் குடும்பத்தோடு குடிவந்து ஒரு வருடம் ஆகிறது.எப்படியாவது அவளிடம் பேசிவிடவேண்டும் ஆனால் என்னவென்று ஆரம்பிப்பது.இவன் தேறவே மாட்டான்னு நினைசிடுவாளோ இல்ல இவன்கிட்ட பேசி என்ன ஆவப்போது.ஒன்னும் பெரியவசதி இல்ல ஸ்கூலுக்கு போறது ஒரு பழைய சைகிள்ல.இப்படி எதாவது நினைப்பாளோ.அவளோ நல்லவசதியான குடும்பம்.அவ வர சைக்கிளே அவளுடைய வசதிய சொல்லும்.

    மவனே இன்னிக்கி நீ அவகிட்ட பேசறே நான் பாக்கறேன்-

    என்நண்பன்
    ஒரு முடிவோட இருந்தான்.டேய் சந்துரு சாயந்தரம பேசலாம்டா இப்போ ஸ்கூலுக்கு நேரம் ஆச்சி.போடா போ கிட்டதட்ட ரெண்டுவருஷமா இததான் நீயும் சொல்ற நானும் கேக்குறேன்.மவனே இதுக்காகதான் அப்போவே சொன்னேன் அவ வீட்டுக்குகிட்ட குடிபோகாத அவகிட்ட உன்னால பேசமுடியாதுன்னு சொன்னேன்.

    நான்--இல்லடா ஆறாம் வகுப்புலர்ந்து பாக்குறோம் ஆனா பேசினதுதான் இல்ல.நீ பாத்தியா அவ என்னைய ஒரு சிரிப்போட பாக்கறா.அடேய் அவ உன்ன மாதிரி லூச பாத்திருக்கமாட்டா போல.ஒருநாள் மாலைபொழுது

    மஞ்சு ஒரு நிமிஷம் இது என் நண்பன்.சொல்லு என்ன? -அவள்
    ஒன்னும் இல்ல இவன் உன்கிட்ட கொஞ்சம் பேசனுமாம்-நண்பன்

    ஏன் அவனுக்கு பேசவராதா நீ என்ன அவனுக்கு?? டேய் பேசி தொலைடா அது வந்து……………….

    எப்டி இருக்கே-இதுநான்
    பாத்தா எப்படி தெரியுது-இதுஅவள்
    எனக்கு காத்துதான் வந்தது.அதுவந்து……….
    அவள் போய் ஒரு நிமிஷம் ஆச்சி.என்னால் பேச முடியல.என்னடா இது தூரத்துல பாக்கும்போது நல்லாதாண்டா இருக்கா.பேசினா பொறுமையே இல்லையே எப்படி பேசறது.டேய் இது ஆவறது இல்ல பேசாமவா போலாம்-நண்பன்.

    கல்லூரி அடிஎடுத்து வைத்த காலம்.நான் அவளுக்காக பஸ்ஸ்டாண்டில் நின்றிருக்கும்போது................டேய் நீ இன்னும் திருந்தவே இல்லையா-நண்பன்
    இல்லடா எனக்கு அவகிட்ட பேசறத விட,பேசினதுக்கப்புறம் அவ எனக்கு உன்ன பிடிக்கலனு சொல்லிட்டனா என்ன பண்றது.என்னை என் போக்கில விட்டுடு.

    இரண்டாவது வருடபடிப்பில் ஒருநாள் அவள்-மழையில் பஸ்ஸ்டாண்டில்-----நான் அவளிடம் என்னங்க எப்டி இருக்கீங்க-பாத்து ரொம்பநாள் ஆச்சி.
    அவள்-என் பிரண்டுக்காக வைட்பண்றேன்.!!!!!!!!!!!!!!!

    -ஒரு பைக்வந்து நின்றது அவள் அதில் தொற்றி கொண்டால்.ஒரு நிமிஷம் என் இதயம் நின்றேவிட்டது.மறுபடியும் என் நண்பன் சொன்னான்-நான்தான் அன்னிக்கே சொன்னேன் நீதான் கேக்கல.இது ஆவறது இல்லன்னு சொன்னேன்.

    பின்பு ஒருநாள் அவளை அதே பஸ்ஸ்டாண்டில் சந்தித்தேன் அப்போது என்படிப்பு முடிந்திருந்தது.அவள் எங்கோ சென்று கொண்டு இருந்தாள்.ஒரு சிறிய புன்னகை அவளிடம் இருந்து வந்தது.அவள் என்னருகே வந்து பேசினாள் என்ன எப்படி இருக்கீங்க?
    நான் நல்லா இருக்கேன் நீங்க-
    அவள் ஒருவித சலிப்புடன் இருக்கேன் என்றாள்.என்ன ஆச்சி மஞ்சு ஒரு மாதிரியா இருக்கீங்க.
    ஒன்னும் இல்ல,,,,,,,,,,,
    சொல்லுங்க நான் ஒன்னும் தப்பா நினைச்சிக்கமாட்டேன்.அவள் ஒன்றும் சொல்லாமல் சென்றுவிட்டாள்.கொஞ்சநாள் கழித்து நானும் என் நண்பன் சந்துருவும் ஒரு ஹோட்டலில் உணவருந்திகொண்டு இருந்தோம்.அப்போது மஞ்சுவின் அம்மா அங்கு காபி குடித்து கொண்டு இருந்தார் என்னை பாத்தவுடன் என்னப்பா எப்டி இருக்கே என்றார்.நானும் நல்லா இருக்கேன்மா என்றேன்.என்ன தம்பி எங்கே வேலை செய்றீங்க?
    நான் ஒருகம்பனில சேல்ஸ் லைன்ல இருக்கேம்மா.நீங்க எப்படி இருக்கீங்க என்றேன்.அவர் ஓ என்று அழுதுவிட்டார் எனக்கு ஒன்னும் புரியல என்ன ஆச்சிம்மா.உனக்கு தெரியாதா தம்பி? சொல்லுங்க என்றேன்.

    அவர் சொன்னது-மஞ்சுவுக்கு நன்றாக மனம் முடித்து கொடுத்து இருக்கிறார்கள்.திருமண ஆன பத்தே நாட்களில் பைக் விபத்தில் அவளுடைய கணவர் இறந்து விட்டாராம்.கொஞ்ச நாட்களிலேயே அவளின் அப்பாவும் இறந்து விட்டாராம்.அவர் இறந்த பிறகு அவருடைய வியாபார நண்பர்கள் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்திற்காக வீட்டையும் விற்று எடுத்து கொண்டார்களாம்.இப்போது மஞ்சு வேலை செய்து அவளும் அவள் அம்மாவும் வாழ்கையை ஓட்டுவதாக கூறினார்.
    நான் அவளிடம் சென்று பேசினேன்.நீ என்னை தவறாக எடுத்து கொள்ளாதே என்றேன்.நான் இன்றும் உன்னையே விரும்புகிறேன் உனக்கு என்னை பிடித்திருந்தால் சொல் நாம் திருமணம் செய்து கொள்வோம் என்றேன்.சொல்லு நான் ஒன்னும் தப்பா நினைச்சிக்கமாட்டேன்.அவள் ஒன்றும் சொல்லாமல் சென்றுவிட்டாள்.


    (அவள் மனதுக்குள் சொல்லியது -----நான் உன்னை விரும்பிய காலத்தில் நீ என்னிடம் சொல்ல வந்ததை இன்றுதான் சொல்கிறாய்.ஆனால் நான் பதில் தரும் நிலையில் இல்லையே என் அன்பே)


    அவள் மறுத்தாள் அவளை சம்மதிக்க வைக்க ஆறுமாதம் ஆகியது.நான் பேச நினைத்த போது பேச இயலவில்லை.வெகுநாள் கழித்து பேசிய பேச்சு என் வாழ்கையின் ஆரம்பபுள்ளியானது இன்று அவளும் நானும் எங்கள் குழந்தையுடன் சந்தோசமாக உள்ளோம்.என் அப்பா சம்மதிக்கவில்லை என்றாலும் என் அம்மா அன்று ஒரு வார்த்தை சொன்னார்.
    உன் விருப்பம் போல செய் வாழ்க்கை உனக்கு சந்தோசமாக அமையட்டும் என்றார். ஒரே வீட்டில் இருந்தாலும்,இன்று வரை அப்பா பேசவில்லை என்றாலும் என் அம்மாவின் அன்பான ஆசியுடன் என் வாழ்கை இனிதே செல்கிறது.
    !!!!!!!!!!!!

  2. Likes ரமணி liked this post
  3. #2
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    23 Sep 2010
    Location
    பஹ்ரைன்
    Posts
    502
    Post Thanks / Like
    iCash Credits
    39,029
    Downloads
    4
    Uploads
    0
    உண்மையாகவா? மிகவும் நன்று

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •