Results 1 to 4 of 4

Thread: கவுண்டர் நக்கல் கலாட்டா!!!

                  
   
   
 1. #1
  புதியவர்
  Join Date
  30 Aug 2016
  Location
  TIRUNELVELI
  Age
  29
  Posts
  14
  Post Thanks / Like
  iCash Credits
  575
  Downloads
  0
  Uploads
  0

  கவுண்டர் நக்கல் கலாட்டா!!!

  கவுண்டமணியின் நக்கல் கதை!!!!!!
  😆😆😆😆😆


  கவுண்டர்:யாரா இங்க வெள்ளைச்சாமி?

  செந்தில்:அண்ணே..வணக்கம் னே.நான்தான் வெள்ளைச்சாமி.

  கவுண்டர்:என்னது நீ வெள்ளைசாமியா..வெளுத்து போன சாமி மாதிரி இருக்க...அப்போ நீதான் அஞ்சலிய கட்டிக்க போற மாப்பிள்ளையா?

  செந்தில்:எஸ்.வாட் யு வான்ட்?

  கவுண்டர்:பெரிய ஜாக்சன் துறை.இங்கிலிஷ்ல தான் பேசுவாரு.எட்டி வுட்டா எட்டு ஊரு தள்ளிபோய் உழுவ.ஆமா,அப்படி என்ன என் மாப்புள வேலு கிட்ட இல்லாதது உன்கிட்ட இருக்குன்னு உன்னை மாப்பிள்ளை ஆக்குனான் அந்த குருவி கூடு தலையன்.

  விஜயகுமார்:நிறுத்துரா.....

  கவுண்டர்:இங்க என்னத்த ஓட்டறாங்கன்னு நிறுத்த சொல்ற.இதான் இவன்கிட்ட இருக்கிற கெட்ட பழக்கம்.பக்கத்துலையே நின்னாலும் என்னமோ பத்து ஊரு தள்ளிநிக்குறா மாதிரி கத்தி கூப்பிடுறது.

  விஜயகுமார்:பேசாதடா.என்ர சொன்ன,யென்ற மாப்பிளைகிட்ட என்ன இருக்குன்னா கேட்ட.நானூறு ஏக்கர் நஞ்சை,அறநூறு ஏக்கர் புஞ்சை.எழுபதுதென்ன மரம்.வாழை தோப்பு,மாந்தோப்புன்னு இப்படி ஏகப்பட்ட சொத்து கிடக்குதுடா..உங்ககிட்ட என்னடா இருக்கு?


  கவுண்டர்:இதென்ன பிரமாதம்.எங்க ஊருல ஆயிரம் ஏக்கர் நஞ்சை,ரெண்டாயிரம் ஏக்கர் புஞ்சை,நூறு தென்ன மரம்.அஞ்சு வாழை தோப்பு.எட்டு மாந்தோப்புன்னு ஏகப்பட்ட கிடக்கு.என்ன கழுதை,ஒன்னுகூட எங்க பேருல இல்லை.

  செந்தில்:ஹிஹிஹிஹி...அப்போ வெறும் பயலுகளா?

  கவுண்டர்:அஹ,நாங்க வெறும் பய.இவுரு வெள்ளாவில வச்சி வெளுத்த பய.போடா டேய்,தீஞ்சி போன தீச்சட்டி மாதிரி இருக்கிற நாய் திமிரா பேசுற.அடிச்சு கொன்னே புடுவேன்.

  சிவகுமார்:எலேய் மணி,நிப்பாட்டுயா...ஐயாஆஆஅ...

  கவுண்டர்:ஐயோ நீங்களா...நீங்க பேசி முடிகிறதுக்குள்ள கல்யாணமே முடிஞ்சி வலைகாப்பே வந்திடுமே.

  சிவகுமார்:நாம பார்த்து வளர்ந்த புள்ளைக.அதுக சந்தோஷத்துக்கு நாமலே தடையா இருக்க கூடாதுயா.ரெண்டு பேருக்கும் கல்யாணத்த நடந்திடுங்க சாமி.

  விஜயகுமார்:நீ சொன்னவுடன் நடத்துறதுக்கு கல்யாணம் என்ன விளையாட்டா.கல்யாணம்கிறது ஆயிரம் காலத்து பயிர் யா.

  கவுண்டர்:நீ ஒரு புளிச்சு போன தயிர்யா.இன்னும் எத்தன காலத்துக்கு இதையே சொல்லுவ.

  பொன்னம்பலம்:யாரா பார்த்து என்ன பேச்சுடா பேசுற.சொல்லுங்க மச்சான்,இவன் தலைய அறுதிடுறேன்.

  கவுண்டர்:அறுக்கிறதுக்கு என் தலையென்ன வாழை இழையா.ஆமா நீ தானே அஞ்சலியோட நாய் மாமன்..ச்சா..தாய்மாமன்.நீ இங்க என்ன பண்ற,போன வாரமே உன்னை கார்பரேஷன்காரங்க புடிச்சிட்டு போய்டாங்கன்னு பேப்பர்ல படிச்சேன்.

  பொன்னம்பலம்:என்னை ஏண்டா அவங்க புடிக்கணும்?

  கவுண்டர்:இல்லை,ரோடுல சுத்துற நாய்களை எல்லாம் கார்பரேஷன்காரங்க புடிச்சிட்டு போய்டதா பேப்பர்ல படிச்சேன்.அதான் கேட்டேன்.

  பொன்னம்பலம்:என்னை பார்த்தா தெரு நாய் மாதிரியா இருக்கு?

  மனோபாலா:இவன்கிட்ட என்னை பேச்சு பங்காளி.வெட்டி வீசுங்க.

  கவுண்டர்:யாரா இது துடைப்ப குச்சிக்கு துண்டு போட்டா மாதிரி.ஒ,சித்தப்பு.ஆமா,சிலோன்ல இருந்து வந்த சித்தப்புன்னு சொன்னாங்க.பார்த்தா சீக்கு வந்த சித்தப்பு மாதிரி இருக்கான்.

  விஜயகுமார்:யென்ற சொந்தகாரனையா அசிங்க படுத்துற.

  கவுண்டர்:ஊசி போன போண்டா மாதிரி மாப்பிள்ளை,துறுபுடிச்ச அண்டா மாதிரி தாய்மாமன்,நசுங்கி போன சொம்பு மாதிரி சித்தப்பு,இதுகளுக்கு நீ ஒரு தலைவன்.உன் தலைல ஒரு குருவி கூடு வேற.குடும்பமாயா இது.ஒரே குடுகுடுப்புகாரங்க மாதிரி.

  பொன்னம்பலம்:டேய்........

  சந்தானம்:யாரு மேலடா கை வைக்குற

  கவுண்டர்:டேய் மகனே,உன்னை கல்யாணம் முடியுற வரை வேலுவோட இருடான்னு தானே சொன்னேன்.இங்க எதுக்குடா வந்தா?

  சந்தானம்:அதைதான்பா சொல்ல வந்தேன்.அது...

  விஜயகுமார்:டேய்,யாருடா அங்க.இவங்களை வெட்டி வீசுங்கடா.

  பொன்னம்பலம்:மச்சான்,இவங்களை அடிக்க எதுக்கு அத்தன பேரு.நான் ஒருத்தன் போதும்.

  விஜயகுமார்:தனியாவா?

  பொன்னம்பலம்:மச்சான்,பன்னிங்க தான் கூட்டமா வரும்.சிங்கம் சிங்கில்லா தான் வரும்.

  சந்தானம்:அப்போ நீயேண்டா சிங்கில்லா வர.கூட்டமா வர வேண்டித்தானே.

  பொன்னம்பலம்:என்னை கொழுப்புடா உனக்கு.உன்னை...

  கவுண்டர்:மகனே,நீ போய் கல்யாண வேலை பாரு.இவுங்களை நான் கவனிச்சிக்கிறேன்.

  சந்தானம்:ஐயோ அதைதான்பா சொல்லவந்தேன்.அது வந்து...

  வினு சக்கரவர்த்தி:நீ ஒத்துடா பேராண்டி.இவனுகளை நான் கவனிச்சிக்கிறேன்.

  சந்தானம்:ஐயோ தாத்தா,நீயுமா.நான் சொல்றத கே...

  மனோபாலா:டேய்,நீ என்னடா சொல்றது.அத நாங்க என்னடா கேக்குறது.உங்களை மாட்டி வுடனு முன்னே உங்க வீட்டுல கஞ்சா பையை ஒளிச்சுவச்சுருக்கேன்.இனி,உன்னை கிழிச்சி தோரணமா தொங்க விடுறேன் பாரு.

  கவுண்டர்:என்றா சொன்னா என் பையன நீ தோரணமா தொங்க விடுவியா நீயே கிழிஞ்சு போன கோமணம் மாதிரி இருக்க.இதுல என் பையனை கிழிச்சி தோரணம் ஆக்குவியோ.டகால்டி,உன்னை....

  சந்தானம்:ஐயோ அப்பா...நான் சொல்றத...

  செந்தில்:டேய்,என் கல்யாணதையாட நிறுத்த பாக்குறீங்க.உங்களை சும்மா விட மாட்டேன்

  சந்தானம்:அப்போ சுமோ ல கொண்டு போய் விடுவியா.யோவ் கருங்குரங்கே,சொல்றத கேளுயா.

  சிவகுமார்:ஐயாஆஆஆஆஆஆ....

  கவுண்டர்:நீ இன்னும் போலையா?

  சிவகுமார்:சண்டை வேணாம்யா.எல்லாரும் ஒண்ணா போய்டுவோம்யா.

  சந்தானம்:எங்க சுடுகாட்டுக்கா..மாமா
  நீங்களாச்சும் நான் சொல்றத கேளுங்க.டுமில்..டுமில்...(அதான்பா போலீஸ் அரைவ்வுடு)

  போலீஸ்:நிறுத்துங்க.

  வினு சக்கரவர்த்தி:அதெல்லாம் நிறுத்த முடியாது நீங்க போங்க

  போலீஸ்:யாருகிட்ட பேசுறீங்க நாங்க போலீஸ்

  கவுண்டர்:அதான் சொல்றோம் போங்க.போலீஸ்னா சண்டை முடிஞ்ச பிறகு வரணும்.உங்களையாரு முன்னாடி வர சொன்ன.போயிட்டு ஒரு பத்து பாஞ்சு நிமிஷம் கழிச்சு வாங்க.

  போலீஸ்:சட்டத்தை நீங்களே எடுத்துகிட்டா எப்படி?

  சந்தானம்:சட்டை எடுக்கிறதுக்கே வக்கில்லாம சுத்துறோம்.இதுல எங்கத்த சட்டத்தை எடுக்க.

  வேலு,அஞ்சலி:போதும் நிறுத்துங்க.நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிகிட்டோம்.

  விஜயகுமார்,சிவகுமார்:அஹ.என்னை சொல்றீங்க.எப்போ கல்யாணம் நடந்துச்சு?

  சந்தானம்:கல்யாணம் எப்பவோ நடந்துடுச்சு.அத சொல்லத்தான் வந்தேன்.ஆனா நீங்க என்னடான்னா சொல்ல விடாம மொக்கை பண்ணிக்கிட்டு இருக்கீங்க.

  மனோபாலா,
  பொன்னம்பலம்:இந்த கல்யாணம் செல்லாது.

  சந்தானம்:கல்யாணம் செல்லாதோ செல்லுமோ.ஆனா நீங்க ரெண்டு பேரும் இப்போ ஜெயிலுக்கு செல்ல போறீங்க.கலி திங்க போறீங்க.

  மனோபாலா:நாங்க ஏன்டா கலி திங்கணும்?

  சந்தானம்:அட கிழிஞ்ச கோமனமே,எப்போ அஞ்சலியா தூக்குனமோ அப்பவே நீ எங்கவீட்டுல வச்சதா சொன்ன கஞ்சாவை நைட்டோட நைட்டா உன் வீட்டுல அதுவும் உன் ரூம்ல வச்சுட்டோம்.எப்புடி

  கவுண்டர்:மை சன்.யு கிரேட் யா.ஐ அம்சோ ப்ரௌட் ஆப் யு.

  விஜயகுமார்:எனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் இல்லை

  சிவகுமார்:ஐயாஆஆஆஅ...

  கவுண்டர்:மறுபடியும் ஆரம்பிச்சுட்டான்யா...

  வினு சக்கரவர்த்தி:நம்ம சம்மதம் எம்புட்டு முக்கியமோ,அதே அளவு அவுங்க சந்தோசமும் முக்கியம்.அவங்க சந்தோசம் தானேயா நம்ம சந்தோசம்.அவுங்கள கஷ்டப்படுத்தி நாம என்ன சுகத்த காணபோறோம்.

  கவுண்டர்:யோவ் குடுமி,அதான் மீசை இம்புட்டு சொல்லுதுல.கொஞ்சம் இறங்கி வந்தா குறைஞ்சா போய்டுவா.

  விஜயகுமார்:எப்போ என்ர பொண்ணே அவ வாழ்கையே தேடிகிச்சோ அப்புறம் நான் சொல்ல என்னருக்கு.அவ சந்தோசம்தான் என்ர சந்தோசமும்.நல்லா இருங்க.

  செந்தில்:அஹ,மாமா..அப்போ என்ர கதி?

  கவுண்டர்,சந்தானம்:ஊஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ

 2. #2
  இனியவர் பண்பட்டவர்
  Join Date
  23 Sep 2010
  Location
  பஹ்ரைன்
  Posts
  502
  Post Thanks / Like
  iCash Credits
  38,359
  Downloads
  4
  Uploads
  0
  நல்ல கற்பனை சரவெடி..

  நன்று..

 3. #3
  புதியவர்
  Join Date
  30 Aug 2016
  Location
  TIRUNELVELI
  Age
  29
  Posts
  14
  Post Thanks / Like
  iCash Credits
  575
  Downloads
  0
  Uploads
  0
  thanks

 4. #4
  புதியவர்
  Join Date
  30 Aug 2016
  Location
  TIRUNELVELI
  Age
  29
  Posts
  14
  Post Thanks / Like
  iCash Credits
  575
  Downloads
  0
  Uploads
  0

  பசுபதி

  thank you

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •