Results 1 to 4 of 4

Thread: நிலம் (1) - நிலத்தை திருட முடியுமா? - விழிப்புணர்வு தொடர்

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தங்கவேல்'s Avatar
    Join Date
    15 Jun 2006
    Location
    கோயமுத்தூர்
    Posts
    1,500
    Post Thanks / Like
    iCash Credits
    13,984
    Downloads
    114
    Uploads
    0

    நிலம் (1) - நிலத்தை திருட முடியுமா? - விழிப்புணர்வு தொடர்

    எல்லா டாக்குமென்டுகளும் சரியாக இருக்கின்றன. வரி கட்டுகிறோம். நிலத்தின் அனுபவ பாத்தியமும் நம்மிடம் இருக்கிறது. நாம் தான் நிலத்தின் உரிமையாளர் என்று நம்பிக்கையோடு இருப்போம். எல்லா அனுபவ உரிமையும் நம்மிடம் இருந்தாலும் நம் நிலத்தை வேறொருவர் விற்க முடியுமா? என்று கேட்டால் ஆம் என்று சொல்ல முடியும். எப்படி சாத்தியம் என்கின்றீர்களா?

    இதோ எங்களிடம் வந்த ஒரு வழக்கின் விபரம் உங்களுக்காக.

    சமூகத்தில் பிரபலமான ஒருவரின் நிலம் அது. தற்போதைய விலையோ கோடானுகோடி. அப்பிரபலம் காலமாகி விட அவரின் குடும்பத்தாருக்கு நிலம் இருக்கும் இடம் தெரியும். அத்துடன் விட்டு விட்டார்கள்.இப்படியான ஒரு சூழலில் வில்லாதி வில்லன் ஒருவன் இந்த நிலத்தின் மீது கண் வைக்கிறான். காரியங்கள் விறுவிறுவென நடக்க ஆரம்பிக்கின்றன.

    அந்த இறந்து போன பிரபலத்தின் தாத்தாவின் பெயரும், வில்லாதி வில்லனின் தாத்தாவின் பெயரும் ஒன்றாக இருக்கிறது. இனிஷியலும் ஒன்றே. வில்லாதி வில்லன் அந்த நிலத்தை தன் தந்தையின் நிலம் என்றுச் சொல்லி, கோர்ட்டில் அதன் உரிமையாளர் என்று ஆர்டரும் வாங்கி விடுகிறான். அதன் பிறகு அந்த நிலத்தை வேறொருவரிடம் விற்றும் விடுகின்றான். நிலத்தின் உண்மையான உரிமையாளர் அவ்விடத்தில் இல்லாத காரணத்தால் அந்த நிலத்தை விற்று, அதை பிளாட் போட்டு விற்று விடுகின்றார்கள்.

    இந்தச் சூழலில் பிரபலத்தின் வாரிசுகள் நிலத்தைப் பார்வையிட வந்த போது, வில்லாதி வில்லன் செய்து வைத்திருக்கும் வில்லத்தனத்தை அறிகின்றார்கள். எங்குச் சென்றாலும் அத்தனை டாக்குமெண்டுகளும் முற்றிலுமாய் மாற்றப்பட்டு இருக்கிறது. என்ன செய்வதென்றே தெரியவில்லை.

    கோர்ட்டில் வழக்கு போட்டார்கள். (வழக்கு முடிய எத்தனை ஆண்டுகாலம் ஆகும் என்று நினைத்துப் பாருங்கள்)

    எப்படி இப்பிரச்சினையில் இருந்து வெளிவருவது?

    நிலம் அவர்களுக்குத் திரும்பக் கிடைக்குமா?

    இப்படியான ஒரு இக்கட்டான சூழலில் நம்மிடம் இந்தப் பிரச்சினை வருகிறது.

    இந்தப் பிரச்சினையில் உண்மையான உரிமையாளரின் உரிமையை எப்படிக் கண்டுபிடித்து நிலை நாட்டுவது? அதற்கான ஆவணங்களை தேடிப்பிடித்து, சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து நிலத்தினை மீட்டெடுக்க உதவினோம்.

    குறிப்பு : ரெவன்யூ சர்வே ரெக்கார்டு என்பது வெகு முக்கியமான நிலம் சம்பந்தப்பட்ட அரசு ஆவணமாகும். நிலத்தின் உரிமையாளர்களின் பெயர்கள் இந்த ஆவணத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும். தவறும் பட்சத்தில் இது போல பிரச்சினைகள் வரக்கூடும். எதிர்காலத்தில் நிலம் சம்பந்தப்பட்ட டாக்குமெண்ட் பிரச்சினைகள் அதிகரிக்கும் என்கின்றார்கள். ஆகவே நிலம் வைத்திருப்போர் அவசியம் கவனிக்க வேண்டியது இந்த ஆவணம்தான்.

    நிலம் நம் பெயரில் இருக்கிறது, பட்டா இருக்கிறது என்பதற்காக அமைதியாக இருந்து விட வேண்டாமென்பதுதான் இந்தப் பதிவின் சாராம்சம்.
    :- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

    => எனது பிளாக் - வாழ்க்கையினூடே

    http://thangavelmanickadevar.blogspot.com/

  2. #2
    இனியவர் பண்பட்டவர் முரளி's Avatar
    Join Date
    12 Aug 2012
    Location
    சென்னை
    Posts
    577
    Post Thanks / Like
    iCash Credits
    32,799
    Downloads
    25
    Uploads
    0
    அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு. நல்ல தொடர் ! தொடருங்கள் !!!

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,827
    Post Thanks / Like
    iCash Credits
    20,357
    Downloads
    183
    Uploads
    12
    நீதி மன்றங்களின் வாயிலாக நிலம் திருடுவது என்பது பல்வேறு வகைகளில் நடக்கிறது. நிலத்து உரிமையாளருக்கே தெரியாமல அவர் மீது வழக்கு பதிவு செய்து எக்ஸ்பார்ட்டி தீர்ப்பு வாங்குவது, போலியான கடன் பத்திரங்கள் மூலம் நிலத்தை தன் பெயருக்கு மாற்றிக் கொள்வது, போலியான வாரிசுரிமை சான்றிதழ் மூலம் அபக்ரிப்பது இப்படி பலவழிகள் உள்ளன.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  4. #4
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    12,507
    Downloads
    28
    Uploads
    0
    எங்களைப்போல் வெளிநாட்டுவாசிகளுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் பதிவு
    என்றென்றும் நட்புடன்!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •