#விடிந்துவிட்டது ..

கிழக்கின் கதவு திறந்துவிட்டாலும் கப்சிப் என ஜன்னல் கதவுகளை மூடிவிட்டதால் விடிந்ததே தெரியவில்லை !

கருவாடு விற்கும் பாட்டியின் கதறலும் பால்காரனின் மணியோசை மட்டுமே பகலை
பறைசாற்றுகின்றன;

ஜன்னல் வழியே சூரிய ஒளியின் வெளிச்சத்தில் தூசிகள் பறப்பது தெரிகிறது..

ஆனாலும்
ஒரு லட்சமென்றாலும்
ஒரு லிட்டர் பெட்ரோல் போடாமல் ஓடாத பைக் மாதிரி..
ஒரு மடக்கு இஞ்சி டீ குடிக்காமல் எந்த வேளையும் ஓட மாட்டேங்கு..