Results 1 to 6 of 6

Thread: காதலெனும் இனிய பாதை-1

                  
   
   
 1. #1
  Brawin Jack
  விருந்தினர்

  Post காதலெனும் இனிய பாதை-1

  ஓர் இனிய ரம்மியமான குளிர்ச்சியூட்டும் மாலைப்பொழுது,

  சிற்றாறு அணையின் மேல் முகப்பில்லிருந்து பார்த்தாலே தெரிகிறது இயற்கை அன்னையின் சேலையின் வேலைபாடுகள் சோலைகளின் வடிவில்...,

  பச்சைக் கம்பளத்தை விரித்தாற்போல நீள நீளமாக படர்ந்திருந்த அந்த மரங்களின் எழில்மிகு காட்சியே பிரம்மிப்பூடுகிறது .....

  'சல சல'-வென எங்கோ தூரத்தில் இலைச் சருகுகளின் கசமுசா சத்தங்களும்,

  'கீச் கீச்-சென மழலைப் பறவைகள், தாய்ப் பறவையைக் கண்டதாலோ என்னவோ ஆரவாரமிட்டு கத்திக் கொண்டிருந்தது......

  எங்கிருந்தோ வந்துகொண்டிருந்த 'மகரந்த மணமே' பக்கதிலேதோ மலர்ச்சோலை இருப்பதை எடுத்துச் சொன்னது,,,,,,

  ஜோடி ஜோடியாய் பறவைகளும் கோர்வையாய்ப் பறந்து தாங்களும் 'மகிழ்ச்சிக்குத் தளைத்தவர்கள் அல்ல' என காட்டி மாலைப்பொழுதைக் கொண்டாடிக் கொண்டிருந்தது.

  காற்றில் பெண்களின் கூந்தல் அசைவதைப் போல அணையின் நீர் அசைந்தாடி இயற்க்கை அன்னையின் கண்ணீரில் சோகமில்லை என மெலிதாக ஆடிக் கொண்டிருந்தது........

  இத்தனைக்கும் எதிர்மாறாக என் அலைபாயும் சோகமனதை ஒருநிலையாக நிலைநிறுத்த தத்தளித்துப் போராடிக் கொண்டிருந்தேன்.

  எத்தனையோ விதவிதமான வித்யாசமான மனநிலைகளையும், மனங்களையும் படித்த எனக்கு 'ஏன் என்னவளின் மனதைப் படிக்க முடியவில்லை' என நினைத்ததாலோ என்னவோ லேசாக இதயம் சோகத்தால் கனத்தது,...

  என் உயிரினும் மேலாக நேசித்த என் காதலியின் கடைசி வார்த்தைகளை நினைக்கும்போதே, சோகம் வந்து மனதைத் தைத்தது......

  'குற்றுயிராய்க் கிடந்து பாலைவனாகிப் போன என் இதையத்திற்கு தெம்பூட்டும் உறவாய் கடைசி வரை என் வாழ்வில் வருவாள்' என நினைத்த எனக்கு ஏமாற்றமே மிச்சம்......

  என் காதல் உணர்வை துச்சமெனத் தூக்கிப்போட்டுப் போனவளைத் திட்டக் கூட மனமில்லாமல் சகித்திருந்த எனக்கு, எங்கோ வலிக்கிறது என நினைத்த என் கண்களுக்கு தனக்கே சொந்தமான கண்ணீரைத் தான் ஆறுதல் பரிசாய்த் தர முடிந்தது போல.......

  மெதுவாக ஓரமாய்க் கசிந்த கண்ணீரைத் துடைத்தபடியே அமைதியாய் அருகில் அமர்ந்திருந்த நண்பனைப் பார்க்க,......

  அவனும் இயற்க்கை அன்னையின் அழகை ரசித்து , ருசிக்கிறான் என்றே தோன்றியது.....

  'அவனுக்குத் தெரிய வாய்ப்பில்லை தான் என் வலிகள்..., 'ஐந்து வருடங்களாக அவளையே என் மனதின் 'காதல் ராணியாய்' வீற்றுருக்கச் செய்து அவளையே மனதில் நினைத்து வாழ்கிறேன்' என்று சொன்னால், 'எங்கே என்னை கேலி செய்து என் காதலை கிண்டல் செய்து விடுவானோ' என்ற பயம் ....
  ........................................................................
  "நம் காதலால் நான் அழிந்தாலும்

  அவப்பெயர்கள் உன்னைத் தீண்டாமல்

  வாழ வைக்குமடி பெண்ணே...."
  ........................................................................

  "டேய்...!! கிளம்பலாமா ... நேரம் ஆய்டுச்சு." என்று சரத் கேட்க..,

  "ம்ம்" என்று மெதுவாக சொல்லிவிட்டு என் எண்ணமெனும் போர்க்குதிரைக்குக் கடிவாளமிட்டு நிறுத்திவிட்டு,

  ஓரமாய் நின்றிருந்த என் Yamaha -R 15 பைக் அருகே வந்தோம்.

  என் நண்பனைப் பற்றி,

  'சரத்' - இது தான் அவன் பெயர். L .K .G -யிலிருந்தே இணைபிரியாமல் இருக்கும் நண்பர்களில் ஒருவன்.
  +2 வரை இணைந்தே படித்தோம். பின்னர் பிரிந்து வேறு வேறு கல்லூரிகளில் பிற்கால எதிர்காலத்திற்காக காலடி எடுத்து வைத்தவர்கள் தான். அவன் SVCET , SV நகர், புளியங்குடி, திருநெல்வேலியில் நான்கு வருடம் EEE படித்து முடித்து சென்னையில் " Energy Meter " எனும் "EB Project "-இல் ஒரு அங்கத்தினராக பணியிலிருக்கிறான். இப்போது அக்காவின் திருமணத்திற்காக மூன்று மாத விடுமுறையாக வந்திருக்கிறான்.

  நவம்பர்(08-11-2014, 09-11-2014)- திருமணம் முடித்தே வேலையில் மறுபடியும் சேர வேண்டும்.

  "என்னடா திடீன்னு எதுமே பேசாம வர" என சரத் கேட்டதும் தான் சுயநினைவே வந்தது.

  "அதெல்லாம் ஏதுமில்ல மச்சான்" என்று இயந்திரத்தனமாகவே பதிலும் சொன்னேன்.

  "சரி பைக்ல ஏறு, இல்லேனா நேரமாய்டும்" என்று விட்டு என்னிடம் சாவியை வாங்கி பைக்கை முடுக்கினான்.....

  "ம்ம்" என்று விட்டு பின்னால் ஏறி அமர்ந்து விட்டேன்.

  நானும் பேசாமல் அமர்ந்து வேறு சிந்தனைக்கே இடம் கொடுக்காமல் அவன் முதுகையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

  கொஞ்ச தூரம் ஓட்டிக் கொண்டு போனவன் 'பக்கக் கண்ணாடியில்' பார்த்திருப்பான் போல,

  "என்னடா என் முதுகையே பாத்துட்டுருக்க" என்றவன் சிற்றாறு சாலையிலிருந்து களியல் சாலையை தொட்டிருந்தான்.

  "எதுமில்லடா .. , லேசா தலைவலி அவ்ளோதான்" என்று விட்டு மீண்டும் கற்பனைக் குதிரையின் கடிவாளத்தை கழற்றி விட்டிருந்தேன்...

  இப்போது 'திற்பரப்பு அருவி" சாலையில் பைக்-இல் போய்க் கொண்டிருந்தோம்.

  'மூண்டு வரும் மேகத்தைப் பார்த்த போதே தெரிந்தது அதுவும் சோகம் தான் என்னைப் போல' என எண்ணி விட்டு மேலே வானத்தை அண்ணாந்துப் பார்த்தேன்.

  அத்தோடு நில்லாமல் அது தனது முதல்த் துளிக் கண்ணீரைத் என் நெற்றியில் பட்டென்று துளிர்த்தது....

  பட்டென்று துடித்ததும் கோபமானது போல, 'பொல பொல' வென்று அள்ளித் தெளித்தது தனது சோகமானக் கண்ணீரை....

  "ரொம்ப மழை கொட்டும் போல, அருகில எங்கயாச்சும் ஒதுங்கிடலாம்" என்று விட்டு ஒதுக்கப் போனான்.

  அப்போது,.......

  .........................................................
  "எத்தனையோ முறை

  தடம் மாறியும்...

  உன்னை பிரிந்ததைப்

  போல வருந்தி

  அழுதவனில்லையடி நான் ..."
  .........................................................

  (தொடரும்......)

 2. #2
  Brawin Jack
  விருந்தினர்

  Post காதலெனும் இனிய பாதை-2

  அடுத்த நொடி என்ன நடக்கும் எனத் தெரியாத ஒரு மாயா லோகமே 'வாழ்க்கை' எனும் ஒற்றைப் படகு....

  இதில் 'வாழ்வா' - 'சாவா' என போராடும் பட்சத்தில்,

  வாழ்வைத் தேர்பவர்கள் 'புத்திசாலிகள், அறிவாளிகள் முக்கியமாக தங்களால் ஏதோ ஒன்றை சாதிக்க முடியும் என்று நினைப்பவர்கள்'.

  சாவைத் தேர்பவர்களை ஒரே வார்த்தையில் சொல்லப் போனால் 'முட்டாள்' எனவே கூறி முடிக்கலாம்.

  "நிலவுக்கே பொறாமை

  என்னவளை அதனுடன் ஒப்பிடுகையில்,

  எங்கே தன்னிடத்தை அவள் பிடிப்பாளோ என்று

  அதிசயங்கள் ஏழாக இருந்தாலும்

  எட்டாவது அதிசயம் எதுவென்று

  கேட்டால் சந்தேகமேயில்லாமல்

  அவன் தனது காதலியின்

  முகத்தையே கூறுவான்

  காதல் போதை ,"


  அப்போது,


  நான் பின்னிருக்கையில் கண்களை மூடிக் கொண்டு அமர்ந்த்திருக்கையில்,

  மழைத் துளிகள் முகத்தில் விழுந்து ஊசிகளாய் துளைத்துக் கொண்டிருந்தது....

  தென்றலும் சேர்ந்து காதலுடன் என்னை அணைக்க, சிறிதாக குளிர ஆரம்பித்தது,

  சிலிர்த்துவிட்டு மெதுவாக கண்களைத் திறந்தேன்............

  "டேய் மச்சி நிறுத்திடவா பைக்க" என்று அவன் திரும்பிக் கேட்டதும்,

  ஒரு பெரியவர் சாலையை குடையுடன் கடந்து கொண்டிருந்தார்......

  "டேய் முன்னாடி பாருடா...ஒரு ஆளு டா.... " என நான் அலறிக் கத்த,

  சட்டென அடித்த 'Brake ' ஆல் இருவரும் கீழே விழுந்தோம். பைக் ஒரு பக்கமாகவும், நாங்கள் மறுபக்கமாகவும்,
  நல்லவேளையாக பெரிய அடிகள் எதுவும் இல்லை.... 'இன்னிக்கு யார் மூஞ்சில முழிச்சேனோ' என்றிருந்தது......

  " யோவ் எங்கயா பாத்துட்டு வற, நீ சாகறதுக்கு எங்க பைக் தான் கெடச்சுதா? " என்று சரத் கோபமாய் வெறித்த பார்வையால் கேட்டுக்கொண்டே எழும்ப....,

  " மன்னிச்சுக்கோங்க தம்பி, மழை பெய்திட்டு இருந்ததால கண்ணு தெரியல, குடை வேற காத்துல சாஞ்சுடுச்சு" என்று சங்கடமாய் பதில் சொல்லியபடி, நெளிந்தபடியே நின்றிருந்தார் அந்த பெரியவர்.

  அதற்குள் ஆட்களும் கூடிவிட்டார்கள். கூட்டம் எங்களைப் பார்த்து முறுக்கிக் கொண்டு நிற்க, அந்த பெரியவர் தான் 'தன் மேல் தான் தவறு' என்று கூறி அடக்கினார்.....

  'சரி' -இனி நமக்கென்ன வந்தது '-என்று கூடமும் கலைந்து போய்விட,

  எனக்கு அவரைப் பார்க்க பாவமாக இருந்ததால் சரத்தை அடக்கினேன்...

  நானும் கீழே விழுந்து கிடந்த பைக்கை எடுத்து நிறுத்திவிட்டு,

  "பைக்க எடுடா கிளம்பலாம்" என்று சொல்லி சாவியை அவனிடம் கொடுத்தேன்,

  அவனும் சாவியைப் போட்டு Start செய்து விட்டு "Self -Start " பட்டன்-ஐ அழுத்த...., அதுவும் புஸ்வானமாகவே இருந்தது... அதாங்க இந்த Yamaha -R 15 நேரத்துக்கு கடுப்பு ஏத்தும். கிக்கரும் இல்லாததால ஸ்டார்ட் பண்ணவும் முடியாத நிலை. எங்கயாது Battery Down -னா அவ்ளோ தான். மெகானிகல் கடை வரை தள்ள வேண்டியது தான். இதுக்கு டிவி-எஸ்-50 எவ்ளோவோ மேல் என இருக்கும்,..... ஏன்னா, அதில தான் பெடல் இருக்குமே... பெட்ரோல் காலி ஆனாலும் பெடலடித்தே வீட்டுக்கு வந்திடலாம்..
  .
  "Self -start காலி,... இப்போ என்னடா பண்றது, வீட்டுக்கு வேற நேரமாயிடுச்சே, உன் பைக்ல வேற கிக்கரும் இல்ல, கொடுமைடா... ச்சே " என்று சரத் எரிச்சலுடன் அங்கலாய்த்தான்.

  "என்னாச்சு தம்பி, எதுனா பிரச்சினையா" என்று அக்கறையுடன் கேட்டபடியே அருகில் வந்துவிட்டார் பெரியவர்...

  "அதெல்லாம் ஒண்ணுமில்ல, உங்க வேலை என்னமோ அத மட்டும் பாத்தாப் போதும்" என்று உச்சகட்டக் கோவத்தை அடிக்கி ஒருநிலையான எரிச்சலில் கூற,

  "கோவப்படாதீங்க தம்பி, என் பையன் பைக் மெக்கானிக் தான். அதோ அது தான் கடை, ஒன்னும் பிரச்சினை இல்ல , உடனே சரிபாத்து தந்திடுவான், நீங்களும் சீக்கிரம் கிளம்பலாம் " என்றுவிட்டு கையோடு அவர்களை அழைத்துப் போனார் அந்த பெரியவர் தன் மகனின் மெகானிகல் கடைக்கு,

  "மைக்கேல், இந்த பைக்ல என்ன பிரச்சினயின்னு பாரேன்" என்று கூறிவிட்டு ஷெட்டில் இருந்த இருக்கைகளில் இருவரையும் அமர வைத்தார்.

  அப்போது தான் நான் மைகேல்-ஐப் பார்க்கிறேன். "எங்கேயோ பார்த்த ஒரு முகம்..... ,அவனாகத் தான் இருக்குமா?? ", "ச்சே ச்சே, அவனா இருக்க வாய்ப்பே இல்ல.....??" , என்னவானாலும் சரி, அவனிடமே கேட்டுவிடலாம்' எனும் நோக்கத்தில் அவனிடம் திரும்புகையில் அவன், அவன் அப்பாவை முறைத்தபடி கேள்வி கேட்கத் தொடங்கினான்.

  "அப்பா..!! .. இப்போ தானே வீட்டுக்கு காபி வாங்கிட்டு வரப் போனீங்க, அவங்கள மட்டும் கடைக்கு அனுப்பி வெச்சுட்டு, நீங்க வீட்டுக்கு போய்ட்டு வர வேண்டியதுதானே, போறப்போ குடை எடுத்துட்டு போனீங்க தானே, இப்போ மழைல நனைஞ்சுட்டு வந்துருகீஙக " -கோவத்துடன் கேட்டான் மைக்கேல்.

  பெரியவரும், காபி வாங்கப் போனது...... சாலையை கடக்க முயன்றது..... பின்னர் நாங்கள் விழுந்தது ..... என கடைசிவரை சொல்லிமுடித்தார்.

  "ஏண்டா...!!! கண்ண என்ன பின்னாடி வெச்சுட்டா வண்டிய ஓட்டுறீங்க" என்று கேட்டுவிட்டு மைக்கேல் சரத்-ஐ முறைதான்.

  எனக்குள்,' ஆமாம், அவனே தான்...மூக்கின் மேல் கோவம், அந்த முரட்டுப் பார்வை., குரலில் இருந்த நிமிர்வு ... இவன் உருவம் மாறினாலும் பேசும் விதம் இன்னும் மாறவில்லை' என்பதை இன்னும் என் கண் முன்னால் அரங்கேற்றிக் கொண்டிருந்தது அவன் செய்கைகள், "என் நண்பன் 'மைக்கேல்' தான்...' "3 வருடங்கள் தாண்டி இப்போ தானேடா உன்ன பாக்றேன்....சரி இன்னும் நெருக்கடி கொடுக்காமல் நானும் கேட்டே விடுவது என முடிவுடன்,

  "டேய்... என்ன யார்னு தெரியுதா? " என கேட்டதும் தான் மைக்கேல் என்னைப் பார்கிறான்......

  "நீ யாரா, ஏன் எவனா வேணா இருந்திட்டு போ," என்று சொல்லி, அப்போது தன் அவன் என்னை சரியாக கவனித்தான் போல....

  " நீ... நீ..... பிரவின் தானே.... எப்படிடா இருக்க..... பாத்து எவ்ளோ வருஷம் ஆய்டுச்சு.... எங்க டா இருக்க இப்போ? என்ன பண்ணிட்டு இருக்க.....
  நம்பவே முடியல மச்சான் உன்ன இப்போ பார்பேன்னு... "-என்றுக் கூறிவிட்டு கட்டிப்பிடித்து கதறியே விட்டான்.

  எனக்குள்ளும் லேசான ஒரு தடுமாற்றம், கணநேரத்தில் பழயநினைவலைகள் வந்து கண்கள் முன் திரையிட, கண்களால் கண்ணீரைத் தான் சொரிய முடிந்தது...
  பாவம் சரத் தான் "பே பே" என முழித்துக் கொண்டே இருந்தான்.......


  இனி மைக்கேல் பற்றி,

  அந்த பெரியவர் தான் விக்டர். அந்த ஊரில் நன்றாக வாழ்ந்த குடும்பம். மனைவி மேரி மற்றும் 2 மகள்களும், ஒரு மகனும்.
  ப்ரீத்தி, நிஷா . இவர்கள் இருவருக்கும் திருமணம் முடித்து வெளியூரில் தன் வாசம் எல்லாம்.... எப்போதாவது ஊர்த் திருவிழாவுக்கு , சொந்தங்களின் திருமணதிற்கு வருவது என மட்டுமே இருக்கும் அவர்கள் வரவு. 'மைக்கேல்'- இவன் தான் இரண்டாமானவன் ..... " கொஞ்ச நாட்கள் தொடர்பில் தான் இருந்தான்..... பிறகு ஆளையே காணோம், என்ன ஆச்சு, எங்க போனான் எதுவுமே தெரியல....

  "பாலிட்டெக்னிக் மெக்கானிகல் முடித்து இப்போது "Bike Workshop And Alteration " என புதிதாக தொடங்கியிருந்தான்.

  விக்டரும் தினமும் மகனுடன் மெகானிகல் ஷெட்டில் தான் இருப்பார். தினமும் மாலை ஐந்து மணியளவில் தான் வீட்டில் வந்து ப்ளாஸ்க்-இல் காபி எடுத்துப் போவார்.இன்றும் அதுபோல வந்தவர் தான் இப்படி ஆகிவிட்டது.

  அதற்குள் மைக்கேலும் சுதாகரித்துக் கொண்டு,

  "சரி... எல்லாம் வெளிய போய் பேசலாம் டா...." என்று அவன் அப்பா இருக்கிறார் என்பதைக் கண்களின் உதவியால் குறிப்பால் உணர்த்திவிட்டு......

  "மச்சான், பைக்-ல என்ன பிரச்சினை-னு பாரு டா........" என நானும் கேட்க, மறுபடியும் ஒரு நிசப்தமான சூழ்நிலையை மனதால் உணர முடிந்தது..

  மைக்கேலும் நன்றாக பைக்கை பார்த்து விட்டு,

  ""Self -Starter " Wire துண்டாயிருக்கு. சேர்த்து Connection குடுத்தா ஸ்டார்ட் ஆய்டும், வேற பிரச்சினை என்னனு அப்புறமா தான் பாக்க முடியும்" என்று கூறி விட்டு Correction -உம் கொடுத்து முடித்தான்.... . நல்லவேளையாக வண்டி எந்த பிரச்சினையும் இல்லாமல் ஸ்டார்ட் ஆனது.

  சரிடா மச்சான் எவ்ளோ டா ஆச்சு, ??? என நானும் தொழில்முறையில் கேட்க,

  "டேய் .... லூசாடா நீ.... எவ்ளோ -னு கேக்ற, ....என்ன பழசெல்லாம் மறந்துபோச்சா " ஆத்திரமாக அதே நேரத்தில் சோகமாக கேட்டான்,

  அப்போதே நினைத்தேன் அவன் இன்னும் மாறாமல் அப்படியே தான் இருக்கிறான் என்று..... சாதாரண நட்பா அது கொஞ்ச நாள் பழக்கமானாலும் உயிராய் இருந்து வந்த பந்தம் ஆச்சே....

  பூமியே ரசாயனக் கலவையால் செய்யப்பட்ட ஒரு பந்து. அதன் உள்ளேயே சுற்றி வரும் நமக்குள்ளும் தாக்கங்கள் கலந்த ரசாயன மாற்றங்கள் வருவது இயல்பு தானே ......

  "சரி விடு டா" என்று கூறி ஒருவழியாக அவனை சமாதானம் செய்வதற்கும் போதும் போதுமென்று ஆகிவிட்டது.....

  " மச்சான், உங்களுக்கெல்லாம் அடி படலையே" என்று கேட்டுவிட்டு என் மேலிருந்து, கீழ்வரைப் பார்க்கிறான்.
  அப்போது தான் நான் சரத்-ஐப் பார்த்தேன் ....இறுக்கமான ஜீன்ஸ் போற்றுந்ததால் இதுவரை காணமல் இருந்த இரத்தம் மூட்டில் இப்போது நன்றாக படிந்து இருந்தது,..... கால் மூட்டிலிருந்து இரத்தம் வழிந்து உறைந்து இருந்தது...

  "ஏய் ... என்ன மன்னிச்சுடு மச்சான்.... வாடா Hospital போயிட்டு மருந்து போடலாம்" என்று அங்கே அரங்கேறிய நட்புறவால் அவனை மறந்து விட்டோமே, எனும் உச்சகட்ட வருத்தத்தில் நான் கேட்க,


  " இல்லடா சின்ன காயம் தான்.... போற வழில எங்கயாது மெடிகல்ஸ்-ல ஜஸ்ட் Band-Aid போட்டுக்கலாம் டா ." என்று இருந்த இடத்தை விட்டு காலை மெதுவாக ஊன்றி எழும்பினான்.

  "அதெல்லாம் ஒன்னும் தேவையில்ல, முதல்ல வீட்டுக்கு போய் முதலுதவி பண்ணிட்டு அப்றமா கெளம்பலாம் " எனக் கூறிவிட்டு எங்களையும் அழைத்துக் கொண்டு கடைக்கு வெளியே வந்தான் மைக்கேல்....


  'என்னடா இப்டி எல்லாம் ஆய்டுச்சே' என மனதில் எண்ணி வருந்தியபடியே நடந்து வர, மைக்கேலின் வீடே வந்து விட்டிருந்தது.
  பலவிதமான ஆச்சர்யக் கோர்வைகள் கலந்த அணிவகுப்பில், நாமும் போய் சிப்பாயைப் போல வார்த்தைகளாய் கோர்த்து நிற்க, ஒருவிதமான உல்லாசம் மனதில் பரவ வீட்டின் உள்ளே காலடி எடுத்து வைத்தேன் .
  காரணங்கள் இல்லாமல் கலைந்து

  போக இது வெறும் கனவும் அல்ல,

  காரணங்கள் சொல்லி பிரிந்து செல்ல

  வெட்டிக் காதலும் அல்ல,

  எத்துயர் வந்தாலும் உயிர்மூச்சு

  முடியும் வரை கூடவே வரும் நட்பு...


  தொடரும்...

 3. #3
  Brawin Jack
  விருந்தினர்

  Post காதலெனும் இனிய பாதை-3

  (இனி நான் சொன்னால் சரிவராது..... காதலனே காதலை பற்றி சொன்னாலன்றி காதலுக்கு அழகில்லை. அதனால் சரத் கதையைத் தொடர்வான்)

  அங்கே.....

  நான் கால்களை மெதுவாக ஊன்றியபடி வீட்டின் உள்ளே காலடி எடுத்து வைத்தேன்.......

  ...........................................................................
  "பேசாமடந்தையைக் கண்டதுண்டோ...

  "என்னவளை வந்து பார்.....

  "திகிலூட்டும் வெற்றுப் பார்வை....

  "காதலா , துரோகமா ....

  "எனும் தடமே தெரியாமல்.....
  ..........................................................................


  பெரியவர் மரியாதையுடன் எங்கள் இருவரையும் சோபாவில் அமரச் செய்தார் .. நாங்களும் நன்றி கூறிவிட்டு அமர்ந்தோம்.
  எதிர் இருக்கையில் அமர்ந்த பெரியவர் அவர் மனைவியை அழைத்து நடந்ததை அவருக்குக் கூறி அறிமுகம் செய்து வைத்தார். அவரும் நன்றி கலந்த வணக்கத்தைச் சொன்னார். பின்னர் அவர் "ஜூலி" என்று அழைத்தார்.

  நான் திடீரென திடுக்கிட்டேன். "ஜூலி... ஜூலி... ஜூலி" என் வாயும் , மனமும் ஒருசேர போராடியது. இருந்தாலும் மனப்போராட்டங்களை அடக்கிகொண்டேன். இருப்பினும் நெருடல் இருந்தது ஒரு ஓரமாய் .... பொங்கிக் கசிந்து வரும் பழைய நினைவுகளை அடக்கவா முடியும்....... காதலை மறந்தாலும் காதலியை?? ஊஹும் ...கஷ்டம் தான்.

  எனக்கு யோசிக்கும் கஷ்டமே கொடுக்காமல் வந்துவிட்டாள் "ஜூலி"- அவளே தான் .... கண்டுவிட்டேன். தேடிய பொக்கிஷம் என் கண்களில் பட்டது.... ... நினைவலைகள் பின்னோக்கி நகர்கிறது நிமிட இடைவெளியில் ......

  ஜூலி-.............

  அவள் என்னுடன் தான் ஆறாம் வகுப்பிலிருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை படித்திருந்தாள். கண்களில் கண்ணாடியும்..... நீளமாய் வரைந்த நெருக்கமான புருவமும், பார்ப்பவர்களை கிரக்கடிக்கும் கண்களுமான என் ஜூலி. அவளை நான் அந்த ஏழு வருடமும் தோழியாய் தான் நினைத்துப் பழகி வந்திருந்தேன். பின்னர் காலவோட்டத்தின் பெயரில் பிரிந்து விட்டோம்.... நான் SVCET கல்லூரியில் படிக்கப் போக , அவள் "ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி- கோயம்புத்தூர்-இல் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பதற்காக போகவே, தொடர்பே இல்லாமல் போயிருந்தது......

  ............................................................................
  "நீ எங்கே விலகினாலும்....

  "உனை தீண்டிய தென்றலையே

  "நான் சுவாசிக்கிறேன்....

  "இதயவீணையால் உன்

  "நினைவுகளை வாசிக்கிறேன்....

  "எக்கணம் பிரிந்தாலும்

  "அக்கணம் உன்னையே

  "தேடுதே இந்த பாழாய்ப் போன

  "என் மனம்
  .................................................................................

  11'th ,12'th சேர்ந்து படித்த நண்பர்கள் அனைவரும் சேர்ந்து "get together " வைக்கலாம் என முடிவெடுத்த நாளிலிருந்தே என் நண்பர்களைக் காணும் ஆர்வம் மிகுதியாய் இருந்தது. எப்போது வரும் எனக் காத்திருந்த அந்த நாளும் வந்தது.......
  இடம் திற்பரப்பு அங்கிருந்து மாத்தூர் தொட்டிப்பாலம் மதியத்திற்கு மேல் என முடிவு செய்திருந்தோம். நண்பர்கள் 20 பேர் தான் வந்திருந்தார்கள் 55 பேரில்.... என் கண்கள் எல்லோரையும் வட்டமடித்து என்னவளிடம் தான் வந்து நின்றது...... கண்ணுக்கு கண்ணாடி போய் இப்போது நீல லென்ஸ் அணிந்திருந்தாள். இப்போதும் ஞாபகம் இருக்கிறது அன்று வெளிர் பச்சை நிறச் சுடிதார் அணிந்திருந்தாள். காதுகளில் அழகான நீள கம்மலும், கையில் ஒரு handbag -உடன் நின்றிருந்தாள். கண்கள் அலைமோதினாலும் மற்ற நண்பர்கள் முன்னால் காட்டிக்கொள்ளும் நிலையில் இல்லை என் மனது.

  கடவுளுக்கே கிடைக்காத அறிய பொக்கிஷமான என் நண்பர்களிடம் நலம் விசாரித்து , கைகள் குலுக்குவதும், கட்டி அணைப்பதிலும் பழைய விஷயங்கள் வந்து மோதி கண்களும் கசிந்தது. கடைசியாக தான் ஜூலி-யிடம் பேசினேன்......

  "Hai sarath .... How Are You " என்று அன்பான ஆனால், அழகான ஆனால், பதற்றமான ஆனால், தெளிவான ஆனால் .... எப்படி கேட்டாள் என்றே தெரியாத பரவசம் என் மனதில்.

  "Yep ....!!! Am fine .... What About you ? நான் சொன்னேன் எதார்த்தமாக.

  "ம்ம் ..நான் நல்லா இருக்கேன்" இது அவள்.

  "என்ன ஜூலி .... புது நம்பர் மாத்துனா குடுக்க மாட்டியா..... ரெண்டு வருஷம் ஆகுது உன்ட பேசி...."

  "இப்போ என்ன பண்ற.....நான் மொபைல் use பண்ண மாட்டேன் அவ்ளோவா..... hostel -ல allowed கெடையாது பா"

  இப்படியாக சரளமாக பேசி பேசி மதியமும் ஆகி விட்டது..... திர்பரப்பில் நாங்கள் இருவரும் நடந்து நடந்து தரைகள் தேய்ந்ததோ என்னவோ எங்கள் கால்கள் ஓயவில்லை..... செருப்பும் தேயவில்லை..... வார்த்தைகளும் தீரவில்லை. சோர்வும் அடக்கவில்லை.

  ....................................................................
  "உன் கண்ணில் மயங்கி....

  "உன் இதழில் நுழைந்து...

  "உன் இதயத்தில் ஊடுருவ ஆசை....

  "இடம் தேடி அலைகிறேன்...

  "அகதியாய்....
  .....................................................................


  முன்னால் திட்டமிட்டபடியே நான்கு பெண்கள் மதிய உணவுகள் எடுத்து வந்திருந்தனர். கடைகளில் சாப்பிடலாம் தான், அதில் வயிறு தான் நிறையுமே தவிர மனது அல்ல..... அதனால் சேர்ந்து அமர்ந்தே அரட்டைகளுடன் உண்டு முடித்தோம். கைகளை அருவி நீரில் கழுவிவிட்டு அரை மணிநேரம் சேர்ந்து பேசி சிரித்துவிட்டு மாத்தூர் போகலாம் என முடிவெடுத்து கிளம்பவும் செய்தோம்.

  எட்டு பேர் பைக் கொண்டு வந்திருந்தனர். அதில் நானும் தான் ஒருவன்.... இருவர் , மூவர் என பைக்-களில் ஏறினோம்..... என் பைக்-இல் இருவர் தான்..... உங்களுக்கே புரிந்திருக்கும் யார் என் பின்னால் அமர்ந்திருந்தது என்று..... ஆமாங்க ஜூலி தான். என்ன ஒரு ஆனந்தம்..... இதயமே இடம் மாறியதைப்போல ..... எனக்கு இதுவரை அவளிடம் காதல் வரவில்லை..... காதல் வந்தாலும் எப்படி அவளிடம் கூற முடியும்...... அப்படி நான் சொன்னாலும் அவள் அதை எப்படி எடுத்துக் கொள்வாள் என நினைத்து அடக்கிக் கொண்டேன் அந்த பாழாய் போன மனதை.

  சரியாக பைக் பின்னால் அமரச் சொல்லியும் பின் கம்பியில் பாதியும், இருக்கையில் பாதியுமாய் இருந்தவளை மேலும் எதுவும் சொல்லாமல் பைக்-ஐ ஓட்டினேன்...... இரு உள்ளங்கள் படும் தவிப்பைக் கண்டதாலோ என்னவோ ரோட்டில் இருந்த பள்ளத்தில் வண்டி இறங்க, சர் என்று வந்து முதுகில் இடித்தவளின் கையும் என் தோளில் வீற்றது. எந்த கவிஞனால் முடியும் ... அட அட அட .... காற்றே எனக்கு காவியமாக, என் பைக்-ஏ எனக்கு தேராக, நானே இந்திரனாய், என் பின்னால் இந்திராணியாய் , திர்பரப்பே எனக்கு பூமியாக, மாத்தூர்-ஏ எனக்கு இந்திரலோகமாக, என் கனவெனும் கற்பனை, மூச்சுகளால் அடைக்க.....ஒரே நிமிடத்தில் நான் காதல் கடவுளானேன். இந்த நிமிடம் இப்படியே நீளாதா என நான் எண்ணினேன்.

  என் எண்ணத்தில் என்னவோ 'காதல்' சூரியனைப் போல உதித்தது நிஜம் தான். ஆனால், அவளுக்கு எப்படியோ தெரியவில்லை. ஒரு விதத்தில் எனக்கு மகிழ்ச்சி தான், தோளில் வைத்த கை இன்னும் எடுக்கப்படவில்லை.... என் மனமே எனக்கு ஊக்கமருந்தைப் புகட்டியது. இப்படியான எண்ணவலைகள் எங்களை மாத்தூரில் கொண்டு சேர்த்தது.

  நினைப்பதற்கு மாறான எண்ணங்கள் மனதில் முளைப்பதாலோ என்னவோ இன்னும் காதல் எனும் விதைகள் மனதிலேயே மடிந்து விடுகிறது... எப்படியேனும் என் காதல் அழியாமல் அவளிடம் போய் சேர வேண்டுமென நினைத்தேன். அவள் வெறுத்தாலும் பரவாயில்லை, அவளிடம் கூறி விடலாம் என நினைத்தேன்.

  எல்லாவரும் வந்து சேர்ந்தாயிற்று.... நுழைவுக் கட்டணம் பெற்றுவிட்டு நடந்தோம் ...... எல்லார் மனங்களையும் படித்து விட்டால் பின்னர் வாழ்க்கை சுலபமாகிவிடும் அல்லவா.... அதனால் தானோ என்னவோ இன்னும் புரியாமல் அதே நேரம் பிரியாமலும் வாழ்கிறோம் வாழ்க்கை எனும் வட்டத்தில். அவளுக்கு பிடிக்கும் என பச்சை மாங்காயில் மிளகாய்பொடி, உப்பு தடவி வாங்கிக் கொடுத்தேன். அவளும் வாங்கிக் கொண்டாள். அட... என் காதலையே அவள் வாங்கியதைப் போல என் மனதிற்குள்.... பாதை முடிந்து ஒரு ஓரமாய் இருந்த சிமெண்ட் கல்லில் அமர்ந்து இருந்தோம் இருவரும்..... அவள் சாப்பிடுவதையே பார்த்துக் கொண்டிருந்தேன். இப்படியே என் காதலையும் உள்வாங்க மாட்டாளா என்று நினைத்தேன். மேலும் மௌனத்திற்கு இடம் கொடுக்காமல்,


  "ஜூலி, உன் மொபைல் நம்பர் தாயேன், இன்னும் உன்கிட்ட பேசாம இருக்க முடியுமா-னு தெரியல...."

  "நோட் பண்ணிக்கோ... அதுக்கு ஏன் இப்டி டயலாக் விடுற " என்று கூறி சிரித்துவிட்டு பத்து இலக்க நம்பர்-ஐயும் தந்து விட்டாள். பத்து விதமான விண்மீன்களையும் என் மொபைல்-இல் அரங்கேற்றி விட்டேன் என் காதலுடன்.

  அப்படியே பேசிப் பேசி ஆறு மணியும் ஆகி விட்டது. பின்னர் யார் யாருடன் போவது என முடிவெடுத்து பைக்-களில் அமர்ந்து கிளம்பினோம். மறுபடியும் காதல் பயணம் இனிதே தொடர்ந்தது.

  அவளை அருமனை பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு "கிளம்புறேன்" என்று கூறி கையசைப்பால் பிரிந்தோம்.
  காதலித்து பிரிந்தால் தான் கண்ணீர் வரும் என நினைத்திருந்தேன்.ஆனால், காதல் வந்தாலுமா கண்ணீர் வரும்..... ஐயோ.... என்னே...!! ஒரு காதலின் திருவிளையாடல்.

  வீட்டில் வந்து அன்றைய நிகழ்வுகளை அசைபோட்டபடி படுத்திருந்தேன்...... திடீரென அவளுக்கு மெசேஜ் செய்யலாம் என நினைத்து மொபைல் எடுத்தால்... "2 Unread Messages " பளிச்சிட்டது. 'யாராயிருக்கும்' என திறந்தால் .... "ஜூலி" தான் Msg எனும் வடிவில் சிரித்துக் கொண்டிருந்தாள்.
  msg 1: I Reached Home .
  msg 2: Saptacha .... thunkitiyaa

  அட அதிசயம் தான் பா.... நான் நினைத்ததை அவள் அனுப்பியிருக்கிறாள். அப்போ அவள் மனதிலும் காதல் இருக்குமா..... ????

  நானும் பதில் அனுப்பும் விதமாக "ம்ம் சாப்ட்டாச்சு.... நீ " என்று அனுப்பினேன்.

  அப்படியே தொடர்ந்தது மனதில் பதிந்த காதலுடன் நட்பு எனும் பெயரில்......

  ஆனால் அன்று,

  ................................................
  "உன்னை நினைத்த

  என் மனதிற்கு

  வேறு என்ன தெரியும்

  காதலைத் தவிர......"
  ........................................................


  (தொடரும்.....)

 4. #4
  Brawin Jack
  விருந்தினர்

  Post காதலெனும் இனிய பாதை-4

  பூமியை சூரியன்
  "காதலிக்கவில்லை" என்று
  சொல்லியும் விடாமல்
  சுற்றி வருவதைப் போல,
  என் காதலெனும் காரிருள் மேகம்
  உன்னை எப்போதும்
  சூழ்ந்து கொண்டே இருக்கும்....
  ........................................................................

  தினமும் நட்புணர்விலேயே மொபைலில் Messages அனுப்பிக் கொண்டிருந்தாலும் என் மனதில் காதல் எனும் அசுரன் படையெடுக்கவெ தயாராக இருந்தான்.

  உன்னிடம் காதலை வெளிப்படுத்த வேண்டுமென நினைக்கும் என் எண்ணங்கள் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராகவே வீணானது. தினம் உன்னிடம் என் காதலை வெளிப்படுத்தி விட வேண்டும் என நினைத்து நினைத்து நாட்களும், நிமிடங்களும் செத்ததே மிச்சம்.

  இதோ...!!!!

  உன்னிடம் மறுபடியும் பேச ஆரம்பித்து ஆறு மாதங்களும் ஓடிவிட்டது. அனால், என் காதலூறும் களங்கமில்லா மனதை அடக்கத் தான் என்னால் முடியவில்லை.

  .........................................................
  நான் உனக்காய் எழுதிய
  வார்த்தைகள் என்
  நாட்குறிப்புக்கு மட்டுமே
  தெரியும்.

  என் காதலியால் என்
  மனது பித்தானது.
  என் காதலால் என்
  நாட்குறிப்பேடு காவியமானது.
  ...........................................................

  சரி... இன்று எப்படியும் என் காதலை அவளிடம் சொல்லிவிடலாம் எனும் முடிவோடு மொபைலை எடுத்து,
  "ஹாய்" என்று எழுதி அவளுக்கு அனுப்பினேன்.
  இரண்டு நிமிட தாமதத்திற்குப் பிறகு "ஹாய்" வந்திருந்தது அவளிடமிருந்தது.....

  .........................................................................
  நொடியில் உன்னை மறக்க
  நினைக்கிறேன்......
  அந்நொடியே உன்னை பலமடங்காய்
  நினைக்கச் செய்கிறாய்......
  இது தான் காதாலா....
  ...........................................................................

  நேராக அவளிடம் கேட்டே விடுவது என முடிவெடுத்து மொபைலை எடுக்க, அதுவே சிணுங்கியது. அவளிடமிருந்து தான் வந்திருந்தது....
  நிமிட தடுமாற்றத்தில் எடுத்து "ஹலோ" என்றேன்...
  "எப்படி இருக்க" எனும் நட்புறவிலிருந்தே ஆரம்பித்தது எங்கள் பேச்சு... நான் எதிர்பார்த்த அந்த பேச்சும் வந்தது.

  என் காதலி பேசும் ஒவ்வொரு வார்த்தையும் காதல் மொழி..... என் காதலி கேட்கும் ஒவ்வொரு வினாக்களும் காவியங்கள்.

  நினைப்புகளில் துள்ளல் அதிகமாக,

  "என்ன ஜூலி யாரையோ லவ் பண்ற போல" என்று தடுமாறியபடியே கேட்டேன்.

  "ஆமாடா... ஸ்கூல் படிக்கிறதிலிருந்தே இருந்தே லவ் பண்ண ஆரம்பிச்சுட்டேன். அந்த "tubelight -கு நான் லவ் பண்றது இன்னும் தெரியாது. அவன் மனசுல நான் இருக்கேனா அப்டின்னும் தெரியாது டா ?.... " என்று நிறுத்தினாள்.

  செத்தே விட்டேன் ஒரு நொடியில்......
  பூமியே மாற்றிச் சுழன்றது......
  காகித மனம் தாறுமாறாய் கிழிந்தது.....
  பேசும் நாக்கு துண்டுதுண்டாய் வெட்டப்பட்டது....
  துடிக்கும் இதயமும் நின்று விட்டது.......
  மூச்சு வாங்கி, மூச்சு வாங்கி நுரையீரலும் சுருங்கியது.....
  ஒருவாறாக நுரைதள்ளிய மனதை அடக்கி, "யாராயிருக்கும்" என யோசித்த மனதிற்கு எதுவும் தட்டுப்படவில்லை.

  "யாரது" என்று மட்டும் குரலில் தடுமாற்றம் தெரியாமல் கேட்டே விட்டேன்.

  அவள் சொன்ன பதில்......????

  ...........................................................................
  இதயமே....!!
  உன்னிடம் யாசகமாய்
  கேட்கிறேன்.......
  என் காதலியை நினைத்த
  மனதை திரும்பக் கொடுத்து விடு.....!!!
  ............................................................................

  (தொடரும்...)

 5. #5
  Brawin Jack
  விருந்தினர்

  காதலெனும் இனிய பாதை-5

  .............................
  பாழாய்ப் போன என்
  இதயத்திற்கு எங்கே தெரியப்
  போகிறது.....
  என் சுவாசத்திற்கு
  காரணம் உன்
  வாசம் தானென்று......
  .................................


  "உனக்கு புரியலையா இல்ல புரியாத மாதிரி நடிக்கிறியாடா??" என்று ஜூலி கோபத்துடன் கேட்க...

  எனக்கு எரிச்சலாக இருந்தது, இருந்தாலும் அடக்கிக்கொண்டு...,

  " நெஜமா தெரியல பா" என்று பொறுமையாகக் கேட்டேன்.


  "நாம ஸ்கூல் படிச்சப்பவே எனக்கு அவன் நல்ல Friend .... என்ன " கண்ணாடி, கண்ணாடி"-னு ரொம்ப கிண்டல் பண்ணுவான் அப்போலாம்..... நான் அழுதா எனக்கு ஆறுதல் சொல்வான்.... வீட்ல இருந்து எடுத்து வர மதிய சாப்பாட திருடி சாப்டுவான்..... மதிய இடைவேளைல சலிக்காம என் கூடவே பேசிட்டு இருப்பான், பசங்க கூப்டா கூட போகாம எண்ட மட்டுமே பேசிட்டு இருப்பான். கூட படிக்குற பொண்ணுகள மதிச்சு தான் பேசுவான். அவன் பேசுறது கூட கவிதையா கேட்டுகிட்டே இருக்கு இப்போகூட.... நான் 12th கடைசி Exam -க்கு Practical Record மறந்து வீட்ல வெச்சுட்டு Class -ல அழுதுட்டு இருந்ததைப் பாத்து என் வீட்டுக்கு போய் எடுத்துட்டு வந்து தந்தான்.... என் மனசுல என்ன இருக்குனு கண்டுபுடிக்கத் தெரிஞ்சவன்... ஆனா, இன்னும் என் மனசுல யாரு இருக்கா-னு கண்டுபுடிக்கத் தெரியாத தற்குறி...உண்மையாவே அவன் லூசா இல்ல லூசு மாதிரி நடிக்கிறானா அப்டின்னு தான் தெரியல டா " என்று கூறிவிட்டு மௌனம் சாதித்தாள் என் காதலி.

  ................................................

  புலவனுக்கும் பாட்டில் பிழைகள்,
  என்னவள் குடத்துடன் நடக்கையிலே.....

  ரோஜாக்களுக்கும் பொறாமை ...
  என்னவள் வெயிலில் தான் முடிகளை உலர்த்துகையில் ....

  தீ ஜுவாலைகளுக்கும் எண்ணலை பார்த்தல் பொறாமையாம் ,
  அதை விட என்னவள் ஜொலிக்கிறாள் என்று...
  ...................................................................

  என்ன சொல்றதுனே தெரியாமல் மூர்ச்சையாகிப் போனேன்..

  "யாருன்னு புரியுதா சரத்", ஜூலி

  " ஆமா, புரியுது ... புரியாத மாத்ரியும் இருக்கு???" , இது நான்.

  "நீ தான் டா அந்த tubelight , லூசு எல்லாமே " என்றாள் என் ஜூலி.

  "அட நான் தானா ?? என்று கேட்டதும் தான் உணர்ந்தேன் அவள் என்ன சொன்னாள் என்று ??

  அதிர்ச்சியில் அப்படியே உறைந்து விட்டேன்....

  'அவ என்ன சொன்னா, என்ன சொன்னா ' என எனக்கு நானே பல முறை கேட்டுப் பார்த்தேன்.

  "ஜூலி ஒருவாட்டி சொல்லு.. நீ என்ன சொன்ன ??" என உணர்ச்சி மாறாமல் நான் கேட்டேன்.

  ...................................................
  கடலில் கரைந்த உப்பைப் போல....

  என்னவள் மனதில் நான் கரைந்து கிடக்கிறேன்..
  ......................................................................


  "ஆமா டா... உன்கிட்ட என்னால மறைச்சு வைக்க முடியல டா... ஸ்கூல்-ல படிக்கிறப்போ நிறைய பிரண்ட்ஸ் இருந்தாங்க. அப்புறம் தினமும் வீட்ல இருந்து தான் ஸ்கூல் வந்துட்டு இருந்தேன். வீட்ல அப்பா, அம்மா கூடவே இருப்பேன். அப்போ எதுமே தெரியல.

  உன்கிட்ட நான் எப்டி சொல்ல முடியும் உன்ன நான் லவ் பண்றேன், உன் கூடவே இருக்கணும்னு தோணுது, உன் கைய புடிச்சுகிட்டே ரொம்ப தூரமா நடக்கணும் போல இருக்கு, இப்படி எல்லாம் சொல்ற மாதிரியா நாம சின்ன வயசுல எல்லாம் இருந்தோம்.

  "ஸ்கூல்-ல தெரிஞ்ச அவ்ளோ தான் செத்தோம் .. அப்டி தானே இருந்தோம். இப்போ ஹாஸ்டல் வந்துட்டேன். இங்க ரொம்ப தனிமையா இருக்கு டா. உன்ன பத்தி தான் அதிகமா நெனைச்சுட்டு இருந்தேன். ஆனா எப்போ உன்ன மறுபடியும் பார்த்தேனோ, அப்போவே முடிவே பண்ணிட்டேன் ... நீ தான் எனக்கு இனி எல்லாமே-னு.

  ஆனா உன்ன பாத்தா அன்னிக்கே உன்கிட்ட சொல்லனும்னு நெனச்சேன் டா . ஆனா " get together "-ல எல்லா பிரெண்ட்ஸ் சேந்து இருந்ததால உன்கிட்ட எதுமே சொல்ல முடியல டா. அப்புறம் இன்னொரு டவுட் இருந்துச்சு டா. "நீ என்ன லவ் பண்றியா?? இல்லையா?? னு தான்.

  ஆனா இப்போ கூட தெரியல நீ என்ன லவ் பண்றியா , உன் மனசுல நான் இருக்கேனா னு?? ஆனா என்ன பண்றது பலூன்ல காத்த எவ்ளோ நாள் தான் அடைச்சு வைக்க முடியும் .. அது மாத்ரி தான் டா நான் உன் மேல வெச்ச அன்பு, காதல் , பாசம் எல்லாமே இப்போ உன்ன அதிகமா என் மனசு தேட வைக்குது. கடந்த இரண்டு வருஷமா நான் உன்கிட்ட பேசாம இருந்தத நெனச்சா இப்போ கூட ஐயோ பாலைவனம் போல இருந்ததா தாண்டா ஞாபகம்.
  நீ இப்போ என் வாழ்க்கைல வந்த அப்புறமா தான் டா அந்த பாலைவனத்தில ஒரு சின்ன செடி முளைக்குற மாதிரி இருக்கு. சரத் ரெண்டு வருஷமா சொல்லனும்னு நெனச்சு என் மனசுல புதைச்சு வெச்சத நான் இப்போ சொல்லுறேன். " i love you " இவ்ளோ பேசுறேனே டா எதுமே சொல்ல மாட்டேன்குற...??? நான் எதாச்சும் தப்பா சொல்லிட்டேனா???

  ........................................................
  திடீரென வந்த சுனாமி அலை போல....
  சட்டென வந்தவள் ...
  கண் இமைக்கும் தருணத்தில்
  பார்வையால் என்னை
  கற்பழித்து விட்டாள் ...
  காதலில் விழுந்தேன்
  இப்போது ....
  ...................

  ஐயோ ஐயோ ஐயோ .... " இவ்ளோ பேச தெரியுமா என் ஜூலிக்கு ??

  'காதல் என்பது என்னவென்று கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சொல்வார்கள. அவருடன் வாழ்ந்தால் வாழ்க்கை நனறாக இருக்கும் என்பது காதல் அல்ல, அவருடன் தான் வாழக்கை என்பதுதான் காதல்.
  இதயத்திற்கு ரத்தமாகவும், உடலுக்கு தண்ணீராகவும் இருப்பது காதல்.
  காதல் என்பது அழகான கனவு. காதலிப்பதும், காதலிக்கப்படுவதும் விவரிக்க முடியாத அளவிற்கு மகிழ்ச்சியை அளிக்கும். காதல் இதயத்தில் இருந்து வர வேண்டும். கண்களில் இருந்து அல்ல.காதலிப்பதை விட ஏதாவது சிறந்த பொருள் ஒன்று இருந்தால் அது காதலிக்கப்படுவதாக இருக்கும்.
  சில சமயம் கண்களால் பார்க்க முடியாத விஷயங்களை இதயம் பார்க்கும். அதுதான் காதல்.
  காதலில் விழுவதற்கு புவியீர்ப்பு சக்தியின் பங்கு ஏதும் இல்லை. காதல் காதல் தான். அது எப்போதும் சாயம் போவதில்லை. காதலுக்காக உயிரிழப்பவர்களும் உண்டு, காதலை இழந்ததால் உயிரிழப்பவர்களும் உண்டு. நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவு*ம் வைக்க முடியும். காதல் என்பது வாழ்க்கையில் ஒரே ஒரு முறை வரும் சலுகை.

  இத்தனை வருடமும் காதலைப் பற்றி படித்திருந்தாலும், என் வாழ்க்கையிலும் 'காதலா' ... மனம் மகிழ்ச்சியில் திளைத்து குத்தாட்டம் போடுகிறதே ...!!!


  'உனக்காக தானே அன்பே நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன்.... நீரோட்டத்தில் நீந்தி கானகத்தையா அடைய முடியும்... கடலைத் தானே சேர முடியும். அது போல தான் நீ இப்பூலோகத்தில் எங்கு போனாலும் என்னிடம் தான் வருவாய் என நினைத்த என் கனவு வீண் போகவில்லை. அவள் வந்து விட்டாள். ஆமாம், நீ வந்து விட்டாய். என் உயிருக்கு உயிராக, என் மனதிற்கு மருந்தாக, என் உணர்ச்சிகளின் ஊற்றாக, என் முழு முதல் மூச்சாக என்னுள் கலக்க இதோ என்னவள் வந்து விட்டாள்'

  என்ன சொல்லலாம், ???

  சில பெண்களைப் போல 'நான் அப்படி எல்லாம் நினைத்து உன்னிடம் பழகவில்லை என நடிக்கலாமா?

  இல்லை வேண்டாம் ...?? உடனே நானும் உன்னைத் தான் காதலிக்கிறேன் ...

  எதைச் சொல்லலாம் எனத் தெரியவில்லையே என நான் திகைக்கும் முன்பே ....

  அவள் கேட்டாள்????

  ........................................................
  நீ வருவாய் என கண்விழித்துக்
  காத்திருந்தேன்....

  ஆனால்,
  எப்படி தான் திருடினாய் ??

  கண்கள் திறந்திருக்கும் போதே
  என் இதயத்தை

  செல்லத் திருடி ...!
  ..................................  (தொடரும்...)

 6. #6
  இனியவர் பண்பட்டவர்
  Join Date
  23 Sep 2010
  Location
  பஹ்ரைன்
  Posts
  502
  Post Thanks / Like
  iCash Credits
  38,309
  Downloads
  4
  Uploads
  0
  நன்றாக இருக்கிறது. நல்ல வேகம். நல்ல நடை.

  வர்ணனைகள் அழகு. சிந்தனைகளும் அழகு.

  தொடருங்கள்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Members who have read this thread: 0

There are no members to list at the moment.

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •