இட ஒதுக்கீடு...

கணவன், பிள்ளைகள்.
அலுவலக வீட்டு வேலைகள்..
குடும்பத்தினர் எதிர்பார்ப்புகள்..
இன்னும் இவைகள் அவைகள்..

20 முதல் 50 வரை
100 சதம் ஆக்கிரமித்ததில்

20க்கு முன் மனதில் இருந்தவனை
30 வருடம் மறந்தே (!) இருந்தேன்..

இதுவரை இடம் பிடித்தவர்களின்
ஆக்கிரமிப்பு சதவீதம் குறைய குறைய
ம( ற )றைந்திருந்த நினைவுகளின்
இட ஒதுக்கீடு ஏறுமுகமாய்